ஹூஸ்டன் : அமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணத்தில் இந்திய இளைஞர் படுகொலையான வழக்கில், அப்பகுதி போலீசார் இரண்டு பேரை கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில், பசடெனா நகரில் உள்ள ஒரு கடையில், இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா அருகிலுள்ள எலப்ரோலு என்ற பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரா (22) என்ற இளைஞர் பகுதி நேர ஊழியராகப் பணியாற்றி வந்தார்.அவர் பணிக்கு சேர்ந்து மொத்தம் மூன்று வாரங்களே ஆகியிருந்த நிலையில், கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று, அதிகாலையில் முகமூடி அணிந்த கொள்ளையன் ஒருவன் திடீரென கடைக்குள் நுழைந்து, ஜெயச்சந்திராவை சுட்டுக் கொன்று விட்டு, அங்கிருந்த பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றான்.இதுகுறித்து, அக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.,யில் பதிவான காட்சிகளை அப்பகுதி போலீசார், பத்திரிகைகளுக்கு அனுப்பி விசாரித்து வந்தனர். இந்நிலையில், இப்படுகொலை தொடர்பாக, டேனியல் ஜேக்கப் ஸ்டினர்(22) மற்றும் மிக்கேல் ரேய் மோரிஸ்(29) என்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களில் ஸ்டினர், நேற்று முன்தினம் போலீசில் சரண் அடைந்தார். அவர் தான் முகமூடி அணிந்து வந்து ஜெயச்சந்திராவைக் கொன்றவர், கொள்ளையடித்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிந்துள்ளது. தான் திருடிய 19 ஆயிரம் ரூபாயைத் திரும்ப ஒப்படைப்பதாக அவர் கூறியுள்ளார்.சம்பவம் நடந்த போது, தான் அங்கு தவறுதலாக மாட்டிக் கொண்டதாக மோரிஸ் கூறியுள்ளார். இவ்வழக்கில் தன்னைச் சிக்க வைக்க முயற்சி நடப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால், அவர் அங்கு உளவு பார்க்க வந்ததாக, சி.சி.டி.வி.,யில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் கருதுகின்றனர்.ஸ்டினர் மற்றும் மோரிஸ் இருவரும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரிடமும் தற்போது போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
home



Home
கருத்துரையிடுக