பதுளையில் விடுதலைப் புலிகளின் முக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இரகசியப் புலனாய்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டவருக்கும் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மானுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளதாக புலனாய்வுத்துறையினரின் விசாரணைகளின் போது தகவல்கள் வெளிவந்துள்ளன.
கைது செய்யப்பட்டுள்ளவர் மல்லாகம் பிரதேசத்தை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும் கடந்த 2006ம் ஆண்டு முதல் பதுளையில் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். பதுளையில் காளி கோயிலின் அர்ச்சகராகவும் கடமையாற்றியுள்ளார். ஆனாலும் இவருடைய பெயரை இன்னமும் வெளியிடவில்லை.
பதுளையில் உள்ள முக்கியஸ்தர்கள் அல்லது பதுளைக்கு வரும் முக்கியஸ்தர்களை இலக்கு வைத்துத் தாக்குதலொன்றை மேற்கொள்ளும் திட்டத்துடனேயே அவர் பொட்டம்மானால் பதுளைக்கு அனுப்பப்பட்டிருப்பதாக புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
home



Home
கருத்துரையிடுக