News Update :
Home » » ஆடைகள் களையப்பட்ட நிலையில் மூதாட்டி சடலமாக மீட்பு

ஆடைகள் களையப்பட்ட நிலையில் மூதாட்டி சடலமாக மீட்பு

Penulis : ۞உழவன்۞ on திங்கள், 12 மே, 2014 | பிற்பகல் 12:10

தனிமையில் வசித்து வந்த முஸ்லிம் மூதாட்டி ஒருவர் ஆடைகள் களையப்பட்ட நிலையில் இரத்தவெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அலவத்துகொடை பொலிஸ் பிரிவிலுள்ள ரம்புக்-எல பள்ளிவாயல் வீதியில் வீடு ஒன்றில் தனிமையாக வசித்து வந்த சுமார் 80 வயதுடைய சித்தி சாதுனா என்ற மூதாட்டியே இவ்வாறு நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கண்டி பதில் நீதவான் மஹிந்த லியனகே மரண விசாரணையை
நடாத்தியதுடன் பிரேத பரிசோதனையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

கண்டி வைத்திய சாலையில் இன்று பிரேத பரிசோதனை நடாத்தப்பட உள்ளது. மூதாட்டி கொலை செய்யப்படுவதற்கு முன் ஆடைகள் களையப்பட்டிருந்ததால் இவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger