திங்கள், 23 நவம்பர், 2009
அதிபர் ராஜபக்சேயின் பதவிக்காலம் 2011-ம் ஆண்டு வரை உள்ளது. என்றாலும் சிங்களர்களிடம் ஆதரவு அதிகரித்துள்ளதால் இப்போதே பொதுத் தேர்தலையும், ஜனாதிபதி தேர்தலையும் நடத்தி விடலாம் என்ற முடிவுக்கு ராஜபக்சே வந்துள்ளார். தேர்தலில் வென்று அடுத்த 5 ஆண்டுக்கு ஆட்சியில் இருக்க வேண்டும் என்று ராஜபக்சே தீவிரமாக உள்ளார். ஆனால் அவரை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டுள்ளன. பொது வேட்பாளராக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவை நிறுத்த தீவிரமாக உள்ளன. பொன் சேகா நேற்று கொழும்பில் புதிய அலுவலகத்தை திறந்துள்ளார். தேர்தலை நடத்துவது குறித்து அதிபர் ராஜபக்சே மூத்த மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார். இன்றிரவு தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். வேறு 3 அரசு உயர் அதிகாரிகளும் இதை உறுதி செய்துள்ளனர்.
home



Home