News Update :
Home » » யாழ்ப்பாண பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த இந்திய அமைதிப் படை

யாழ்ப்பாண பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த இந்திய அமைதிப் படை

Penulis : Antony on செவ்வாய், 7 டிசம்பர், 2010 | AM 10:47


யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதி காக்கும் படையினரால் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த யுத்தக் குற்றங்கள் கனடாவின் நசனல் போஸ்ட் பத்திரிகையில் நேற்று வெளியாகி உள்ளன.

பருத்தித் துறை பிரதேசத்தை சொந்த இடமாக கொண்டவரும், கனடாவில் தற்போது வாழ்ந்து வருபவருமான ஆர். சுரேந்திரன் என்பவர் இந்திய படையினரின் அட்டகாசங்களை நேரில் கண்டிருக்கின்றார்.

நசனல் போஸ்ட் பத்திரிகையின் வாசகர் என்கிற வகையில் பத்தி ஒன்றை எழுதி இருக்கின்றார்.

இவர் இதில் முக்கியமாக தெரிவித்து உள்ளவை வருமாறு:-

”1987 ஆம் ஆண்டு நான் பருத்தித் துறையில் இருந்தேன். யுத்த டாங்கிகள் சகிதம் இந்திய படையினர் எமது நகரத்துக்குள் பிரவேசித்தனர். தமிழர்கள் அவர்களுக்கு செங்கம்பள வரவேற்பு வழங்க தயாராக இருந்தனர்.

ஏனெனில் சிங்கள படையினரிடம் இருந்து எம்மை காப்பாற்ற வந்திருந்த இரட்சகர்கள் என்று நம்பி இருந்தனர். ஆனால் அவர்கள் இரட்சகர்கள் அல்லர். இராட்சதர்கள். புதிய யுத்தம் ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராக தொடங்கினார்கள்.

அப்பாவித் தமிழ் சிவிலியன்களுக்கு எதிராக துப்பாக்கிகளை பயன்படுத்தினார்கள். கொன்றார்கள். நான் சிங்கள இராணுவத்தினர்தான் உலகில் மிக கொடூரமான படையினர் என்று முன்பு நினைத்திருந்தேன். ஆனால் இந்திய படையினர் மிக மிக பயங்கரமானவர்கள், மோசமானவர்கள்.

சில காலம்தான் இவர்கள் யாழில் நிலை கொண்டிருந்தனர். ஆனால் சிங்கள இராணுவத்தினர் ஒட்டுமொத்தமாக இது வரை புரிந்திருக்கும் தமிழின படுகொலைகள் மற்றும் கற்பழிப்புக்கள் ஆகியவற்றை காட்டிலும் இந்திய படையினர் மேற்கொண்டிருந்த படுகொலைகளும் கற்பழிப்புக்களும் ஏராளம்.

இந்திய படையினரால் கொல்லப்பட்டவர்களில், கற்பழிக்கப்பட்டவர்களில் எனது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரும் கணிசமான தொகையில் உள்ளனர். இன்றும் என்னை ஒரு மிக பயங்கரமான கொடூரம் சித்திரவதை செய்து கொண்டே இருக்கின்றது.

என்னுடன் ஒரே வகுப்பில் படித்திருந்த நண்பி ஒருவர் இந்திய படையினரால் கூட்டாக கற்பழிக்கப்பட்டார். அவரது மார்பகங்களை அறுத்து எடுத்து இருந்தனர். அவருடைய நிர்வாண உடல் வீதியில் வீசி இருந்தனர்.

அச்சடலத்தின் மேல் கைக்குண்டு வீசி இருந்தனர். 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 21 ஆம் திகதி ஒரு தீபாவளிப் பெருநாள். ஆனால் அது யாழ்ப்பாண மக்களுக்கு மிகவும் துன்பகரமான நாள்.

யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய படையினர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி இருந்தனர். கொல்லப்பட்டவர்களின் சடலங்களை மறுநாள் எடுத்து எரித்து விட்டனர்.

வைத்தியசாலையில் வைத்து படுகொலை செய்யப்பட்டிருந்த அப்பாவித் தமிழர்களின் எண்ணிக்கை 68.” இவ்வாறு இப்பத்தி தொடர்கின்றது
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger