News Update :
Hot News »
Bagikan kepada teman!

ஆடைகள் களையப்பட்ட நிலையில் மூதாட்டி சடலமாக மீட்பு

Penulis : ۞உழவன்۞ on திங்கள், 12 மே, 2014 | PM 12:10

திங்கள், 12 மே, 2014

தனிமையில் வசித்து வந்த முஸ்லிம் மூதாட்டி ஒருவர் ஆடைகள் களையப்பட்ட நிலையில் இரத்தவெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அலவத்துகொடை பொலிஸ் பிரிவிலுள்ள ரம்புக்-எல பள்ளிவாயல் வீதியில் வீடு ஒன்றில் தனிமையாக வசித்து வந்த சுமார் 80 வயதுடைய சித்தி சாதுனா என்ற மூதாட்டியே இவ்வாறு நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கண்டி பதில் நீதவான் மஹிந்த லியனகே மரண விசாரணையை
நடாத்தியதுடன் பிரேத பரிசோதனையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

கண்டி வைத்திய சாலையில் இன்று பிரேத பரிசோதனை நடாத்தப்பட உள்ளது. மூதாட்டி கொலை செய்யப்படுவதற்கு முன் ஆடைகள் களையப்பட்டிருந்ததால் இவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
கருத்துகள் | | Read More...

தலையில்லாமல் நிர்வாண நிலையில் பெண் பிணம்

Penulis : ۞உழவன்۞ on வெள்ளி, 4 ஏப்ரல், 2014 | AM 5:57

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

டெல்லியின் ஜனக்பூரி பகுதியில் ஒரு பஸ் நிறுத்தம் அருகே  மர்ம பை ஈ மொய்த்த படியும் நாய்கள் அதை சுற்றி  மோப்பம் பிடித்தபடியும் கிடந்தது. இதை வருவோரும் போவோரும் பார்த்தபடி சென்றனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது.

உடனடியாக போலீசார் வந்து அந்த பையை சோதனை செய்தனர். பையை சோதனை செய்த போது பைக்குள் தலையில்லாத பெண்ணின் பிணம் ஒன்று இருந்தது. அந்த பெண்ணின் உடம்பு  நிர்வாண நிலையில் காணப்பட்டது அந்த பெண்ணிற்கு 30 முதல்- 35 வயது இருக்கும்.

பெண்ணின் உடம்பில் ஆங்காங்கே ரத்த காயங்கள் இருந்தன. யாரோ அந்த பெண்ணை  கொலை செய்து நிர்வாண நிலையில் பையில் திணித்து அங்கு போட்டுள்ளனர் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால் அந்த பெண் கற்பழிக்கபடவில்லை என போலீசார் மறுத்து உள்ளனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
கருத்துகள் | | Read More...

தாய்லாந்தில் இரண்டாம் உலகப்போர் கால குண்டு வெடிப்பு; 6 பேர் பலி!

Penulis : ۞உழவன்۞ on புதன், 2 ஏப்ரல், 2014 | PM 4:45

புதன், 2 ஏப்ரல், 2014

தாய்லாந்தின் பாங்கொக் நகரிலுள்ள கழிவு உலோக களஞ்சியசாலையொன்றில் இரண்டாம் உலகப்போர் கால குண்டென சந்தேகிக்கப்படும் குண்டொன்று இன்று புதன்கிழமை வெடித்ததால் குறைந்தது 6 பேர் பலியானதுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

 பணியாளர்கள் அந்த குண்டை வெட்டி திறக்க முயற்சித்தபோதே அது வெடித்துள்ளது.

நிர்மாணத்தளமொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த குண்டை நிர்மாணப் பணியாளர்கள் செயலிழந்த குண்டெனக் கருதி கழிவு உலோகங்களை சேகரித்து விற்பதில் ஈடுபட்டிருந்த ஒருவரிடம் விற்றுள்ளனர்.

இதனையடுத்து கழிவு உலோகக் களஞ்சியசாலைக்கு கொண்டு வரப்பட்ட அந்த குண்டில் உள்ள உலோகப் பகுதியை பிரித்தெடுக்க பணியாளர்கள் முயற்சித்தபோது அது வெடித்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பால் குறிப்பிட்ட களஞ்சியசாலை மட்டுமல்லாது அருகிலுள்ள வீடுகளும் கடும் சேதத்துக்குள்ளாகியுள்ளன.
கருத்துகள் | | Read More...

ஜெனீவா தீர்மானத்தை இலங்கை அரசு ஏற்க வேண்டும்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

ஜெனீவா தீர்மானத்தை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஆளும் கூட்டணியின் ஒரு அங்கமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது.

அந்தத் தீர்மானத்திக்கு முகம்கொடுத்து குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை நிரபராதிகள் என்று நிரூபிப்பதால் மட்டுமே அபாண்டமான குற்றஞ்சாட்டுபவர்களை மண்ணைக் கவ்வவைக்க முடியும் என அக்கட்சியின் பொதுச் செயலர் ஹஸன் அலி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
அவ்வாறு செய்யாமல், விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம் எனக் கூறுவது குற்றம் சாட்டுபவர்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் எனும் தோற்றப்பாட்டை ஏற்படுத்தக் கூடும் எனவும் ஹஸன் அலி கூறுகிறார்.
வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை தைரியமாக எதிர்கொண்டு அந்தக் குற்றச்சாட்டுகள் தவறு என நிரூபிப்பதே சாலச் சிறந்ததாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஜெனீவாவில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளும் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானமும் நாட்டுக்கு எதிரானது அல்ல, அவை இறுதிகட்ட போரின்போது குற்றமிழைத்ததாகக் கூறப்படும் தனிநபர்களுக்கு எதிரானவையே என அவர் கூறினார்.
நாட்டிலுள்ள அனைவரையும் குற்றவாளிகளாக ஜெனீவா தீர்மானம் காணவில்லை என்றும், போர் நிறுத்த காலமான 22.2.2002 முதல் போர் முடிவடைந்த 19.5.2009 வரையிலான பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் தான் இதற்கான பதிலைச் சொல்ல வேண்டும் எனவும் ஹஸன் அலி கூறுகிறார்.
இலங்கை அரசுடன் தமது கட்சிக்கு பல விஷயங்களில் முரண்பாடு இருந்தாலும், ஆட்சியிலிருந்து வெளியே வருவது சரியான நிலைப்பாடு இல்லை எனவும் அவர் கூறுகிறார்.
அரசாங்கத்தின் அணுகுமுறையையே தாங்கள் குறை கூறுவதாகவும் அரசின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்வில்லை எனவும் ஹஸன் அலி மேலும் தெரிவித்தார்
கருத்துகள் | | Read More...

லண்டனிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ள மொறிசியஸ் மாணவி!

மொறிசியஸ் மாணவியான யாஷிகா இன்று இரவு 9 மணிக்கு ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து நாடு கடத்தப்படவுள்ளார்.
மொறிசியஸ் நாட்டைச் சேர்ந்த யாஷிகா லண்டனில் அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பித்ததை அடுத்து அவர் இன்று நாடு கடத்தப்படவுள்ளார்.
மேற்படி மாணவி 2011ம் ஆண்டு தனது தாயாரோடும் தனது சகோதரர்களோடும் லண்டனுக்கு வந்துள்ளதை அடுத்து லண்டனில் அகதி அந்தஸ்து கேட்டு விண்ணபித்திருந்துள்ளார்.

யாஷிகாவின் அகதி அந்தஸ்து விண்ணப்பத்தை பரிசீலித்த பிரித்தானிய உயர்ஸ்தானியகம், மொறிசியஸ் இல் எந்தவொரு பிரச்சினையும் இல்லை எதற்காக லண்டனில் அகதி அந்தஸ்து கோருகிறார் என நிராகரித்தது.

யாஷிகாவை நாடு கடத்தப்படும் என கடந்த 30ம் திகதி அறிவித்ததையடுத்து அவரை நாடு கடத்த வேண்டாம் என 175000 கையெழுத்துக்கள் அனுப்பப்பட்டும் அவர் இன்று நாடு கடத்தப்படவுள்ளார்.

இன்று இரவு 9:00 மணிக்கு மொறிசியஸ்க்கு புறப்படும் விமானத்தில் நாடுகடத்தப்படவுள்ள யாசிகாவை விமான நிலையத்துக்கு கூட்டிச்செல்லப்பட்டபோது மிகவும் கவலையோடு இருந்துள்ளார் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் | | Read More...

நல்லிணக்க முயற்சிகளை சீர்குலைக்கிறது அமெரிக்கா – கோத்தா ஆவேசம்

Penulis : ۞உழவன்۞ on சனி, 11 ஜனவரி, 2014 | AM 5:05

சனி, 11 ஜனவரி, 2014

சிறிலங்காவுக்கு எதிராக ஆதாரமற்ற போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் போருக்குப் பிந்திய நல்லிணக்க செயற்பாடுகளை அமெரிக்கா சீர்குலைப்பதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
“ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியாவில் தனது சொந்த செயற்பாடுகள் தொடர்பாக எந்த விசாரணையும் நடத்தப்படாத நிலையில், சிறிலங்காவின் பொறுப்புக்கூறல் விவகாரங்களில் அமெரிக்கா எதற்காக அக்கறை காட்டுகிறது என்று உண்மையில் புரிந்து கொள்ள முடியவில்லை.

மேற்குலகின் இந்த இரட்டைவேடம் குறித்து கடந்த திங்கட்கிழமை ஸ்டீபன் ராப்பையும், அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிசனையும் சந்தித்த போது சுட்டிக்காட்டியிருந்தேன்.
முன்னாள் லிபிய அதிபர் முவம்மர் கடாபி கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதையும் அவர்களிடம் நினைவுபடுத்தியிருந்தேன்.

வன்னியில் போரின் போது கையாளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து ஐ.நா மனிதாபிமானப் பணியகத்தின் அறிக்கைகளின் மூலமே அறிந்து கொள்ளலாம்.
சில அமெரிக்க அதிகாரிகள் இங்குள்ள களநிலவரங்கள் குறித்து எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றனர்.
தீவிரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின்“ போருக்கு சிறிலங்காவும் ஒத்துழைப்பு வழங்கியது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் | | Read More...
 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger