இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையின்றி வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் மண்டபம்,பாம்பன் பகுதியிலிருந்து விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்கின்றன.மண்டபம் கோயில்வாடி பகுதியிலிருந்து நேற்று வழக்கம்போல் 120க்கும் அதிகமான விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்குச்சென்றன.
இப்பகுதி மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து தங்களது கப்பல் மூலம் மீனவர்களின் படகுகளில் மோதியுள்ளனர்.
பின் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த இறால்களை பறித்து சென்றனர்.
home
Home
கருத்துரையிடுக