வடக்கு,கிழக்கு பகுதிகளில் வெளிநாடுகள் மற்றும் உதவி நிறுவனங்களின் கடன் மற்றும் கொடை நிதியில் இருந்து புதிய கட்டடங்கள் அமைப்பதை நிறுத்துமாறு சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ மேறகொள்ளப்பட்டு வரும் கட்டட நிர்மாணப் பணிகளை தனது இந்த உத்தரவின் மூலம் கடந்த 9ம் திகதி முதல் அமைச்சர் பசில் ராஜபக்ச நிறுத்தி வைத்துள்ளார்.
புதிய கட்டடங்களை அமைபதற்குப் பதிலாக ஏற்கனவே உள்ள கட்டடங்களை புனரமைப்பு செய்வதில் கவனம் செலுத்துமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை அறுவடையாகும் நெல் போன்ற தானியங்ளை சேமிக்கும் களஞ்சியங்களை அமைப்பதற்கு மட்டுமே பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
எந்தக் காரணமும் குறிப்பிடப்படாமல் இரண்டு மாகாணங்களிலும் உள்ள அதிகாரங்களுக்கு இந்த அறிவுறுத்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜப்பானிய அனைத்துலக கூட்டுத்தாபனம் ஆகியன வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணிகளுக்கு நிதிஉதவிகளை வழங்கியுள்ளன.
சிறிலங்கா அரசின் முடிவினால் இந்த அமைப்புகளின் கட்டட நிர்மாணப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை இந்திய அரசின் நிதியுதவியுடன் 50,000 வீடுகளை அமைக்கும் திட்டமும் இந்த உத்தரவினால் பாதிக்கப்படுமா என்று தெரியவில்லை.
எனினும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிபிடத்தக்கது.
home
Home
கருத்துரையிடுக