ஐரோப்பிய யூனியன் பாராளுமன்ற மனித உரிமை அமர்வில் இலங்கை எழுப்பிய ஆட்சேபனையை அந்தச் சபை ஏற்றுக் கொண்டுள்ளது.ஐரோப்பிய யூனியனுக்கான இலங்கைத் தூதுவர் எழுத்துமூலம் தனது ஆட்சேபனையைத் தெரிவித்திருந்தார்.
கடந்த ஆறாம் திகதி மோதல்களுக்குப் பிந்திய இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றபோது,அதில் பங்கேற்றவர்கள் முழுக்க முழுக்க இலங்கைக்கு எதிரான கருத்துக்களைப் பிரதிபலித்தனர்.
அப்போது அந்த அமர்வுக்கு தலைமை தாங்கியவர் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டுக்கு விளக்கமளிப்பதற்கான நேரத்தை வழங்கவில்லை. அது முற்றிலும் பாரபட்சமானது என்று பெல்ஜியத்திலுள்ள இலங்கைத் தூதுவர் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
இலங்கைக்கு விளக்கமளிக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டு பெல்ஜியத்திலுள்ள இலங்கைத் தூதுவர் ரவினாத ஆரியசிங்கவுக்கு, ஐரோப்பிய பாராளுமன்ற மனித உரிமை உப குழுவின் தலைவர் ஹேடி ஹடுவாலா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தனது கருத்துக்களை எழுத்துமூலம் அறிவிக்கும்படியும்,அதற்கு உரிய முக்கியத்துவம் அளித்து மனித உரிமை உப குழு உறுப்பினர்களிடையே அது விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
home
Home
கருத்துரையிடுக