
தமிழீழ விடுதலைப் புலிகளின் குற்றச் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சு இன்று விசேட இறுவட்டு ஒன்றை வெளியீடு செய்ய உள்ளது.
வன்னிப் போர் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் மக்களுக்கு இழைத்த அநீதிகள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் இந்த இறுவட்டு வெளியிடப்படுகின்றது.
வன்னி மக்களின் ஆதாரங்களுடன் இந்த இறுவட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இறுதிக் கட்ட போரின் போது சிறுவர் போராளிகளை இணைத்துக் கொண்டமை, மதகுருமார் மீது தாக்குதல் நடத்தியமை, தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் இந்த இறுவட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
போரின் இறுதி நாட்களில் புலிகள் மேற்கொண்ட கொலைகள் தொடர்பில் பிரதேச மக்களே சாட்சியமளித்துள்ளனர்.
இந்த இறுவட்டை சர்வதேச புலி வலையமைப்பின் பிரச்சாரங்களுக்கு எதிராக பயன்படுத்த முடியும் என பாதுகாப்பு அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
home
Home
கருத்துரையிடுக