
கொலிவுட்டில் மாப்பிள்ளை படம் மூலம் நாயகியாக அறிமுகமான ஹன்சிகா மோத்வானி, நடிகை குஷ்பு இடத்தை பிடிக்க ஆசைப்படுகிறார்.
ஒரு கல் ஒரு கண்ணாடி சிம்புவுடன் வேட்டைமன்னன் படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.
தமிழ்ப் புத்தாண்டில் வெளிவரவிருக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் இரட்டை அர்த்த வசனம் பேசி நடித்து இருப்பதாக வதந்தி பரவி உள்ளது.
இது குறித்து ஹன்சிகா அளித்த பேட்டியளிக்கையில், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் எனது வசனங்கள் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும்.
இயக்குனர் ராஜேஷ் சொல்லி கொடுத்ததை அப்படியே பேசி நடித்துள்ளேன். குடும்பத்தோடு பார்க்கும் படமாக வந்துள்ளது.
நான் குஷ்பு போல் இருப்பதாக பலரும் பாராட்டுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. குஷ்பு இடத்தை பிடிக்க ஆசைப்படுகிறேன்.
ரசிகர்களும் நான் குஷ்பு இடத்தை பிடிப்பேன் என்று எனக்கு நம்பிக்கையூட்டுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
home
Home
கருத்துரையிடுக