
புத்தளத்தில் இடம்பெயர்ந்தோர் மத்தியில் பணியாற்றி வரும் ஜன்சிலா மஜீட் என்பவரே இந்த விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதி அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் இவருக்கான விருதை வழங்க உள்ளார்.
இந்த விருதுக்காக, ஜன்சிலா மஜீட் உட்பட, சர்வதேசத்தில் பத்துபேர் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
2007 ம் ஆண்டு, இந்த வருடாந்த சர்வதேச பெண்களுக்கான விருது அப்போதைய, இராஜாங்க செயலாளர் கொண்டலிசா ரைஸ்சால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
உலகளாவிய ரீதியில் தலைமைத்துவம், பெண்களின் உரிமை, அவர்களின் முன்னேற்றம் என்பவற்றில் சிறப்பாக செயற்படும் பெண்களுக்கே இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த வகையில் ஜன்சிலா மஜீட், புத்தளத்தில் உள்ள இடம்பெயர்ந்தவர்கள் மத்தியில் சமாதானத்தை கட்டியெழுப்பல், பெண்கள் உரிமை, நிவாரண உதவிகள், கண்ணிவெடியகற்றல் தொடர்பான அறிவூட்டல் என்பவற்றில் தம்மை ஈடுபடுத்தி வந்துள்ளதாக, அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்துரையிடுக