News Update :
Home » » தமிழ்ப்படம் கின்னஸ் சாதனை

தமிழ்ப்படம் கின்னஸ் சாதனை

Penulis : Antony on வெள்ளி, 26 மார்ச், 2010 | PM 12:22

கனடியவாழ் ஈழத் தமிழர் சுரேஷ் ஜோக்கிம் 12 நாட்களில் தயாரித்து, நடித்த சிவப்பு மழை என்ற திரைப்படம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

கின்னஸ் புத்தக நிறுவனத்திடமிருந்து இதற்கான சான்றிதழ் சமீபத்தில் சிவப்பு மழை குழுவினருக்கு அனுப்பப்பட்டது.

இப்படத்தில், சுரேஷ் ஜோக்கிம், மீரா ஜாஸ்மின், இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, மக்கள் தொடர்பாளர் நெல்லை சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார். படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார்.

1990ம் ஆண்டு பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்று 13 நாள்களில் ஒரு படத்தை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தது. ஆனால் சிவப்பு மழை படம் 12 நாட்களிலேயே அனைத்துப் பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இதன் மூலம் இந்தப் படம் பழைய சாதனையை முறியடித்துள்ளது.

ஈழப் போராட்டப் பின்னணியில் இந்தப் படம் உருவாக்கப்பட்டதால், இந்தியாவில், சென்சார் சான்றிதழ் பெறுவதில் பல போராட்டங்களை சிவப்பு மழை திரைப்படம் சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger