
தமிழீழ விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் திறமையாகச் செயற்பட்ட இலங்கை முப்படைகளையும் சோ்ந்த 1000 வீரர்கள் இன்று அலரி மாளிகையில் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு கிழக்கு யுத்தத்தின் போது காத்திரமான முறையில் பங்களிப்பு வழங்கிய படைவீரர்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு இவ்வாறு பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதமர் டி.எம். ஜயரட்ன, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதிக்கட்டப் போரில் ஈடுபட்ட முப்படைகளையும் சோ்ந்த ஆயிரம் படைவீரர்களில், இராணுவத்தைச் சோ்ந்த 680 பேருக்கும், கடற்படையைச் சோ்ந்த 170 பேருக்கும், விமானப்படையைச் சோ்ந்த 85 பேருக்கும் மற்றும் பொலிஸ்துறையைச் சோ்ந்த 65 பேருக்கும் இவ்வாறு பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதேவேளை, இந்நிகழ்வில் அமைச்சர்கள், பிரதிஅமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.





கருத்துரையிடுக