
கடந்த திங்கட்கிழமை மீசாலை கனகம்புளியடியில் உள்ள வீட்டிற்குச் சென்ற இருவர் மோட்டார் சைக்கிளில் அவரை அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் ஒரு வாகனப் புறோக்கர் எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் அழைத்துச் சென்றவர்கள் செல்வத்தின் நண்பர்கள் என தாம் நம்பியதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக அவர் காணமல் போயிருந்தார். எனினும் நேற்றிரவு கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பில் தனது மகன் மகேந்திரன் செல்லம் கடத்தப்பட்டு இருப்பதாகவும் 80 லட்சம் ரூபா கப்பம் வழங்கினால் மட்டுமே அவரை விடுவிக்க முடியும் என கடத்தல்காரர்கள் கோரியதாக தந்தையார் தெரிவிக்கிறார்.
கப்பத்தை கொடுக்க மறுத்த குடும்பத்தினர் பொலிசாரின் உதவியை நாடியிருந்தனர். ஆயினும்; அவரது சடலம் இன்று இரவு மீசாலையில் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் தற்போது யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக