News Update :
Home » » மகிந்த ஆதரவு பேரணியை புறக்கணித்த மட்டக்களப்பு மக்கள்

மகிந்த ஆதரவு பேரணியை புறக்கணித்த மட்டக்களப்பு மக்கள்

Penulis : Antony on வியாழன், 9 டிசம்பர், 2010 | PM 11:54


இங்கிலாந்தில் போர்குற்றவாளி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் ஒக்ஸ்போர்ட்டில் உரை நிகழ்த்த தடுத்தமை ஆகியவற்றை கண்டித்து கருணாவின் ஆதரவாளார்களால் மட்டக்களப்பு நகரில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மட்டக்களப்பில் மட்டுமன்றி கிழக்கு மாகணத்திலேயே ஆதரவை இழந்த கருணாவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மகிந்த ஆதரவு பேரணிக்கு மக்கள் யாரும் வருகை தராததை அடுத்து திணறிப்போன கருணாவின் ஆதரவாளர்கள் மட்டக்களப்பு பின்தங்கிய பிரதேசமான படுவான்கரையில் உள்ள பாமர மக்களிடம், யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு வழங்குவதாக கூறி லொறிகளிலும் பஸ்களிலும் ஏற்றி வந்து பேரணியில் ஈடுபடச் செய்துள்ளார்கள்.

எதற்காக இந்த பேரணி, கைகளில் என்ன எழுதியுள்ள பாதாகையை ஏந்தி வைத்துள்ளோம் என்று கூட தெரியாமல் இந்த மக்கள் அரசாங்க அதிபர் பணிமனை வரையிலும் நடந்துசென்றுள்ளார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட சிறிய அளவிலான மக்களை விட கருணாவினால் வழங்கப்படும் சன்மானத்திற்காக செயற்படும் கூட்டமே அங்கு கலந்து கொண்டிருந்ததை புகைப்படங்கள் மூலம் காணக்கூடியதாக உள்ளது.

இந்த பேரணியில் புகைப்படத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் கால்களை இழந்து சக்கர நாற்காலியில் இருக்கும் நபர் நித்தி. இவர் முன்னாள் இலங்கை படைவீரர். கடந்த 2004ஆம் அளவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட பெருமளவிளான பொருட்களை சூறையாடியதற்காக இனந்தெரியாத நபர்களினால் சுடப்பட்டு மயிரிழையில் உயிர் தப்பினார். மற்றும் பிரதேச செயலாளரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தியற்காக கடந்த 3 மாதங்களுக்கு முன் பொலிசாரினால் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகஜர் வழங்கும் போது சுட்டிக்காட்டப்படும் மற்றையவர்கள் கருணாவின் அடியாட்கள். பல கொலை கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள். மகஜர் என்ன எழுதி இருக்கு என வாசிக்கத் தெரியாதவர்கள் மகஜர் வழங்குகிறார்கள். இதை விட வேறென்ன வேடிக்கை இருக்கு.

மட்டக்களப்பில் எவ்வளவோ புத்திமான்களும் தமிழ் அமைப்புகளும் இருக்கின்றன. அவர்கள் எவரும் இந்த பேரணியில் கலந்துகொள்ளவில்லை. அதைவிட மட்டக்களப்பு நகரில் வாழும் தமிழர்கள் மகிந்தவிற்கான ஆதரவு பேரணியை கணக்கில் கூட எடுக்கவில்லை.

தமிழர்கள் மீதான இலங்கை அரசின் கொடூரமான போர்க்குற்றங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் இலங்கை அரசை எதிர்க்கும் வகையில் மட்டக்களப்பு மக்கள் மகிந்த ஆதரவு பேரணியை புறக்கணித்திருப்பதன் மூலம் வெளிப்படுகிறது.


Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger