
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கும் இடையில் பனிப்போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
விக்கிலீக்ஸில் அம்பலமான செய்தியொன்றே அதற்கான காரணம் என்று மேலும் தெரிய வந்துள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி. மற்றும் பிரதியமைச்சர் முரளிதரனின் சகாக்கள் ஆகியோர் மூலம் தமிழ் வர்த்தகர்களிடம் கப்பம் அறவிடப்பட்ட செயல்களில் பாதுகாப்புச் செயலாளருக்கும் தொடர்பிருப்பது குறித்த அமெரிக்கத் தூதரகத்தின் இரகசிய அறிக்கையை விக்கிலீக்ஸ் தற்போது அம்பலப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கிரீன் கார்ட் பெற்றுள்ள கோத்தபாய ராஜபக்ஷ என்று அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், ஈ.பி.டி.பி. மற்றும் துணை ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகளைத் தடுக்க வேண்டாம் என்று அவர் பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிட்டுள்ளமை குறித்தும் அந்தத் தகவல் பரிமாற்றக் குறிப்பு தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது.
இதுவரை காலமும் அவ்வாறான விடயங்களை மறுத்து வந்த நிலையில் தற்போது கோத்தபாயவின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர் கடும் சீற்றம் கொண்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் காரணமாக எதிர்வரும் காலத்தில் இலங்கையில் இருக்கும் அமெரிக்கத் தூதரகத்துக்கும் அவருக்கும் இடையில் பெரும் பனிப்போர் மூளலாம் என்று கருதப்படுகின்றது.
கருத்துரையிடுக