தமது விவசாய நிலத்துக்கு அருகாமையில் இராணுவ முகாம் காணப்பட்டதால் அரசாங்கத்தினால் விவசாய நிலம் சுவீகரிக்கப்பட்டது. அதன் காரணமாக குழந்தைகளுடன் நாட்டை விட்டு வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் எம்.வி.சன் சீ கப்பல் மூலம் கனடாவைச் சென்றடைந்த இலங்கைத் தமிழப்பெண் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். தாய்லாந்திலிருந்து கனடாவிற்கான கப்பல் பயணங்களின்போது தனது குழந்தைகளுடன் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிபந்தனைகளுடன் கனேடிய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனது பெயரை வெளியிட வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கனடாவிற்கான கப்பல் விஜயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், தமது பகல் உணவு சோறும் கருவாடும் மட்டுமே எனவும் இரவில் கஞ்சி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கனடவை வந்தடைந்த பின்னர் 3 மாதங்கள் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தமையானது தனக்கு மேலும் அதிர்ச்சியளித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தான் அங்கு பெறும் நிவாரணத்தொகையை வைத்தே வாழ்ந்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
home



Home
கருத்துரையிடுக