வவுனியா நகரசபையின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தருமான எஸ்.என்.ஜி.நாதன் தமிழரசுக் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவரிடம் கேட்டபோது நகரசபைத் தலைவர் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டுள்ளதன் காரணமாக கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் காரணங்களை சுட்டிக்காட்டி அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வவுனியா நகரசபையின் தலைமைப்பொறுப்பு தொடர்பில் கேட்டபோது அது தொடர்பில் தாம் தீர்மானிக்கவில்லை எனவும் தற்போது கட்சியில் இருந்து இடைநிறுத்தல் மட்டுமே செய்யப்பட்டு;ள்ளதாக தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் வவுனியா நகரசபைத் தலைவரிடம் கேட்டபோது தனக்கு இதுவரை கடிதம் கிடைக்கவில்லை எனவும் இனிவரும் வேளைகளில் அலுவலக ரீதியில் தெரிவிக்கப்படலாம் எனவும் தெரிவித்ததுடன் அவ்வாறு கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டால் அது தொடர்பில் அலட்டிக்கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.
எனினும் தனது சேவை தொடரும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
home



Home
கருத்துரையிடுக