
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராச்சியமாக பிரித்தானியா இன்று மாறி வருகின்றது என்று மின்சக்தி மற்றும் எரிபொருள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இவர் அவசர கால சட்ட நீடிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்தார்.
இவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-
"பயங்கரவாதிகளுக்குப் பிரிட்டன் அடி பணிந்து நிற்கின்றமையைக் காண முடிகின்றது. தமிழ் நாஷிசம் பிரிட்டன், நோர்வே ஆகிய நாடுகளின் ஆதரவுடனேயே வளர்ந்தது."
home



Home
கருத்துரையிடுக