
முன்பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய குறித்த மாணவன், தமது நண்பர்களுடன் விளையாடிவிட்டு, கைகழுவுவதற்காக எத்தனித்த வேளையில் தவறி கிணற்றில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது பொய்து வரும் கனமழை காரணமாக கிணற்றில் அதிக நீர் நிரம்பியிருந்தது. எனவே கிணற்று நீரை இறைத்து, இரண்டு மணிநேரத்தின் பின்னரே சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.
இவ்வாறு உயிரிழந்த சிறுவன் ஆறு வயதுடைய நாகேந்திரராஜா லிஷாத் என தெரிவிக்கப்படுகிறது.
கருத்துரையிடுக