
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, இந்நாள் மீள்குடியேற்றத்துறைப் பிரதி அமைச்சரும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் இராணுவ தளபதியுமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் விபச்சார விடுதிகள் நடத்தி வருகின்றனர் என்று அமெரிக்காவின் இரகசிய ஆவணம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக இருந்த ரொபேட் ஓ பிளேக்கினால் 2007 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆவணத்தில் இது கூறப்பட்டு உள்ளது. இந்த ஆவணத்தை விக்கிலீக்ஸ் இணையத்தளம் இன்று பரகசியப்படுத்தியது. இதில் அதிர்ச்சியூட்டக் கூடிய, பயங்கரமான விடயங்கள் இடம்பெறுகின்றன. இவற்றை தொகுத்துத் தருகின்றோம்.தொடர்க
கருத்துரையிடுக