வவுனியா நகரசபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் தமிழ் மக்களின் நினைவுச் சின்னங்கள் உடைக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து வவுனியா நகரசபையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது வவுனியா நகரசபையின் உபதலைவர் எம்.எம்.ரதன் இந்த கேள்வியை எழுப்பினார்
வவுனியா நகர சபையின் வரவுசெலவுத்திட்டம் நேற்று நிறைவேற்றப்பட்டது
இதன் போது உரையாற்றிய அவர் வவுனியா நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் அத்துமீறிய செயற்பாடுகள் குறித்து கண்டனம் வெளியிட்டார்.
வவுனியா மருத்துவமனை வளாகத்துக்குள் புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
தமிழ் சின்னங்கள் தகர்க்கப்படுகின்றன.
வன்னி மண்ணை மீட்டெடுத்த பண்டார வன்னியின் சிலை கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டமை, தியாகி திலீபனின் சிலை உடைக்கப்பட்டமை, மாவீரர்களின் துயிலும் இல்லங்கள் தகர்க்கப்பட்டமை, உட்பட்ட தமிழ் மக்களின் நினைவு சின்னங்கள் தகர்க்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் தமிழ் மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள்,அழிக்கப்பட்;டு கொண்டிருப்பதாக ரதன் குற்றம் சுமத்தினார்
இந்தநிலையில் வவுனியா நகரசபை அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அமைக்கப்படும் எந்த ஒரு திட்டத்துக்கும் நகர சபையின் அனுமதிப்பெறப்படவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்
home



Home
கருத்துரையிடுக