
இயக்குநர் செல்வராகவன் தனது தம்பி தணுசை வைத்து இரண்டாம் உலகம் படத்தை இயக்க ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்திற்கு பாமக பிரமுகர் மிரட்டல் விடுத்துள்ளார்.
வடிவேலு 25 வித்யாசமான ரோல்களில் நடிக்கும் புதியபடம் "உலகம்". இப்படத்தை புதுமுக இயக்குநர் ஆதம் பாவா என்பவர் இயக்குகிறார். ஒரு வருடத்திற்கு முன்பே இப்படத்தின் தலைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. படத்தை பா.ம.கா.வை கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் தயாரிக்கிறார்.
சமீபத்தில் இப்படத்திற்கான போட்டோசேஷன் நடைபெற்றது. போட்டோக்களை பார்த்து வடிவேலு பிரமித்து போனாராம்.
மேலும் இயக்குநர் ஆதம் பாவாவின் கற்பனையை வெகுவாக பாராட்டினாராம். இதற்கிடையில் செல்வராகவன் "இரண்டாம் உலகம்" என்ற படத்தை இயக்கி வருகிறார். இதை கேள்விபட்ட "உலகம்" படத்தின் தயாரிப்பாளரும், பா.ம.க., முக்கிய பிரமுகரும், செல்வராகவனை நேரில் சந்தித்து என்னுடைய படத்திற்கு ஏற்கனவே "உலகம்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்போது நீங்களும் உங்களது படத்திற்கு "இரண்டாம் உலகம்" என்று பெயரிட்டுள்ளீர்கள். இதனால் மக்கள் மத்தியில் இருவரது படத்தின் பெயர்களும் குழப்பத்தை ஏற்படுத்தும். ஆகையால் உங்கள் படத்தலைப்பை மாற்றிவிடுங்கள் என்று கூறியுள்ளார்.
ஆனால் செல்வாவோ, இதற்கு மறுப்பு தெரிவித்தாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பா.ம.க., முக்கிய புள்ளி படத்தில் பேசுவது போல, நான் யார் தெரியுமா, உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.
கருத்துரையிடுக