
நாகை மாவட்டம் கீழையூர் அடுத்த செருதூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலுசாமி. மீனவர். இவரது மகள் மதிவதனி (10). அதே பகுதியை சேர்ந்தவர் தேசப்பன் (42), பிச்சை (57) ஆகியோர் வேலுசாமியுடன் சேர்ந்து கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர்.
2007 செப்டம்பர் 23ம் தேதி வேலுசாமியும், அவரது மனைவியும் உறவினர் வீட்டு திருமண விழாவுக்கு சென்றனர்.
இரவு வேலுச்சாமி வீடு திரும்பியபோது, மதிவதனியை காணாமல் திடுக்கிட்டார். அவரும், உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடினர்.
வேலுசாமி புதிதாக கட்டி வரும் வீட்டின் வாசலில் மதிவதனி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தாள். கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், தேசப்பன், பிச்சையுடன் சேர்ந்து மதிவதனியை பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரிந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு நாகை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை நேற்று விசாரித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக தேசப்பனுக்கு ஒரு ஆயுள் தண்டனையும், கொலை செய்த குற்றத்திற்காக மற்றொரு ஆயுள் தண்டனையும், 2 குற்றத்திற்கும் தலா 20,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
குற்றம் நிரூபிக்கப்படாததால் பிச்சை விடுதலை செய்யப்பட்டார்.
கருத்துரையிடுக