
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்களை கொலை செய்தமைக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னால் இழுக்கப்படும் ஆபத்தை இலங்கை எதிர்நோக்குவதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க ராஜாங்க செயலர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
இலங்கையைப் பொறுத்தளவில் வெளி விசாரணையொன்றைவிட, சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தர நியமங்களுக்கு அமைவாக சொந்த விசாரணையொன்றை நடத்துவது சிறந்த தேர்வாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்விடயத்தில் சர்வதேச தர நியமங்களை அடைவதற்கு இலங்கை விரும்பாவிட்டால் இவ்விவகாரத்தை ஆராய்வதற்கு சர்வதேச ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கான அழுத்தம் ஏற்படலாம் என்பதை கூறுவது முக்கியமானது என அவர் கூறியுள்ளார்.
+ கருத்துகள் + 1 கருத்துகள்
நேற்று இரவுதான் இது குறித்தான பதிவிட்டேன்.இரண்டு பயல்களின் பட இணைப்புக்கு நன்றி.
கருத்துரையிடுக