
யாழ்ப்பாணம் கச்சேரியடியிலுள்ள விடுதியிலிருந்து இளைஞன் ஒருவரது சடலமும் கிளிநொச்சி நாச்சிக்குடாப்பகுதியிலிருந்து இளம் பெண்ணொருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளன.
கச்சேரியடி சோமசுந்தரம் வீதியிலுள்ள விடுதியிலிருந்து மர்மமான முறையில் இறந்த இளைஞனின் சடலம் நேற்று முன்தினம் மாலை மீட்கப்பட்டது. சடலமாக மீட்கப்பட்டவர் கொழும்புத்துறையைச் சேர்ந்த துரைராசா சுரேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவரது வாயில் இரத்தக்கசிவுடன் நுரையும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளமையினால் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேபோல் கிளிநொச்சி நாச்சிக்குடாப்பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண்ணொருவரின் சடலம் நேற்றுக்காலை மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலத்தில் அடிகாயங்கள் காணப்படுவதாகவும் உடற் பகுதிகளில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விமலதாசன் பவிதா (வயது 19) என்ற இளம்பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கருத்துரையிடுக