
ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை ஒன்றில் இன்று நிகழ்ந்த கார் குண்டு தாக்குதல் சம்பவத்தில் 60 பேர் உயிரிழந்தனர். இத்தகவலை ஆப்கன் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லோகர் மாகாணத்தில் உள்ள அஸ்ரா மாவட்டத்தில் செயல்படும் சிறிய மருத்துவமனை ஒன்றில் இத்தாக்குதல் நிகழ்ந்தது.
இன்று காலை, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று மருத்துவமனை நோக்கி ஓட்டி வரப்பட்டது. மருத்துவமனையின் பாதுகாவலர்கள் அதை ஓட்டி வந்த நபரை தடுக்க முயன்றனர். ஆனால், அதையும் மீறி காரை ஓட்டிச் சென்று மருத்துவமனை கட்டடத்தில் அவர் மோதச் செய்தார். இதில், சம்பவ இடத்திலேயே 60 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இதனிடையே, இத்தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என்று தலிபான் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் கூறியுள்ளார். பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் தொலைபேசி மூலம் இத்தகவலைத் தெரிவித்துளார்.
மருத்துவமனையை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் ஆப்கனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
home



Home
கருத்துரையிடுக