
தங்கர் பச்சான் இயக்கியிருக்கும் ”களவாடிய பொழுதுகள்” படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் பிரபுதேவா.
பொதுவாக தங்கரின் படத்தில் நடிக்கிற எவரும் மீண்டும் அவரை பற்றி பேச்செடுத்தாலே எரி கல்லை முழுங்கிய மாதிரி முகத்தை காட்டுவார்கள்.
ஆனால், மாஸ்டர் அப்படியில்லை. புகழோ புகழென்று புகழ்கிறார் தங்கர்பச்சானை. ”களவாடிய பொழுதுகள்” மாதிரி ஒரு திரைப்படம் அமைவதே அதிர்ஷ்டம். நான் கொடுத்து வைத்தவன் என்றெல்லாம் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறார் பிரபுதேவா.
இவ்வளவு துாரம் அவரை கவர்ந்த இந்த பண்ருட்டி படைப்பாளி, தான் எழுதிய தொலைந்து போனவர்கள் என்ற நாவலை ஒருநாள் கொடுத்து படிக்கச் சொன்னாராம் பிரபுதேவாவிடம். படித்து பார்த்த மாஸ்டர், அசந்தே போயிருக்கிறார். இப்படி ஒரு அற்புதமான கதை படமாக வேண்டும். இதில் நடிக்க பொறுத்தமான நடிகர் சித்தார்த் மட்டும் தான். நானே அவரிடம் பேசி இந்த படத்தில் நடிக்க வைக்கிறேன் என்றெல்லாம் பாராட்டினாராம் தங்கரை.
சொன்ன மாதிரியே இந்த தொலைந்து போனவர்கள் நாவல் பற்றி சித்தார்த்திடமும் பேசினாராம். முதலில் கதையை பற்றியெல்லாம் கேட்டு தெரிந்து கொண்ட சித்தார்த், ஒருவேளை நான் கால்ஷீட் கொடுத்தா, அதை யாரு இயக்குவாங்க என்றாராம். பிரபுதேவாவும் தயங்காமல் தங்கர்பச்சானின் பெயரை சொல்ல, அதற்கு சித்தார்த் மறுப்பு தெரிவித்துவிட்டாராம்.
home



Home
கருத்துரையிடுக