News Update :

கச்சதீவில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களை அனுமதிக்க மாட்டோம்

Penulis : ۞உழவன்۞ on செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011 | 11:24 AM

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

கச்சதீவில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களை அனுமதிக்க மாட்டோம் என்று இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் காரியவசம் தெரிவித்தார்.

இது குறித்து சனிக்கிழமை அவர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறியவை வருமாறு
இந்தியா இலங்கை ஒப்பந்தப்படி இலங்கைக்கு அளிக்கப்பட்ட கச்சதீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்க மாட்டோம்.
ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடி அங்குள்ள புனித அந்தோனியார் ஆலயத்திற்கு பொதுமக்கள் ஆண்டுக்கு ஒரு முறை சென்று வழிபாடு நடத்த மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
கடந்த ஆண்டு வரை தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தினரால் சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டது உண்மைதான். ஆனால் கடந்த 6 மாதமாக ஒன்று இரண்டைத் தவிர வேறு எந்தவித அசம்பாவிதமும் கடல் பகுதியில் நடக்கவில்லை.
சீனா எங்கள் நட்பு நாடு. இந்தியா எங்கள் உறவு நாடு. இந்தியாவின் உறவுடன் வர்த்தகத்தை மேம்படுத்த விரும்புகிறோம். இதனால்தான் பெங்களூரில் இலங்கை கௌரவப் பிரதிநிதி அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது.
கௌரவப் பிரதிநிதியாக கே.சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
*இந்தியா எங்கள் வர்த்தகத்திற்கும், சுற்றுலாவிற்கும் பெரிதும் உதவுகிறது.
எனவே இந்தியாவுடனான வர்த்தக உறவை மேலும் பெருக்க விரும்புகிறோம்.
இப்படி அவர் தெரிவித்தார்.

கருத்துகள் | | Read More...

இந்திய கடற்படைக்கு சிறிலங்காவின் போர்ப்படகுகள் – உடன்பாடு கையெழுத்தானது


சிறிலங்காவிடம் இருந்து 80 அதிவேக இடைமறிப்புப் படகுகளை கொள்வனவு செய்வதற்கான உடன்பாடு ஒன்றில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சு கையெழுத்திட்டுள்ளது.

இந்தியக் கடற்படையில் அண்மையில் உருவாக்கப்பட்ட சாகர் பிரஹாரி பால் என்ற சிறப்புப் படைப்பிரிவுக்காகவே இந்தப் படகுகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

250 கோடி ரூபா பெறுமதியான இந்த உடன்பாட்டு கடந்த வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சந்தேகத்துக்கிடமான கப்பல்கள், படகுகளை வழிமறித்தல், மற்றும் கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவதற்கே இந்தப் படகுகளை இந்தியா பயன்படுத்தவுள்ளது.

இந்தப் படகுகள் சிறிலங்காவின் சோலாஸ் மரைன் நிறுவனம் 36 மாதங்களுக்கள் கட்டிக் கொடுக்கவுள்ளது.

கடற்புலிகளின் போர்த்தந்திரங்களை அடியொற்றி சிறிலங்கா கடற்படை உருவாக்கியிருந்த சிறப்புப் படகுப் படையணியை முன்னுதாரணமாகக் கொண்டே இந்தியா சாகர் பிரஹாரி பால் என்ற இந்தப் படைப்பிரிவை உருவாக்கியுள்ளது.

சிறிலங்கா கடற்படையின் சிறப்புப் படகு அணியை சேர்ந்த 42 கொமாண்டோக்கள் சில மாதங்களுக்கு முன்னர் மும்பைக்குச் சென்று இந்திய கடற்படையினருடன் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் | | Read More...
 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger