
புவி வெப்பமடைதலுக்கு உதவி செய்து வருகின்ற நாடுகள்தான் உண்மையான போர்க் குற்றவாளிகள் என்று தெரிவித்து உள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ.
கண்டியில் இன்று இடம்பெற்ற ஏர்த் அவர் நாள் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது இவர் இவ்வாறு தெரிவித்தார்.
புவி வெப்பமடைதல் அதிகரிப்புக்கு உதவுகின்ற நாடுகள்தான் உண்மையான போர்க் குற்றவாளிகள், புவி வெப்படைதல் காரணமாக எல்லா உயிரின்ங்களும், அனைத்து தாவரங்களும் அழிந்து விட கூடும், எனவே போர்க் குற்றவாளிகளும், மனித உரிமைகளை மீறுகின்றவர்களும் மேற்சொன்ன நாடுகள்தான், இவ்வகையில் மேலைத்தேய நாடுகள் இவ்வாறு மனித உரிமை மீறல் செயல்பாட்டாளர்களாக உள்ளன, இந்நாடுகளில் முதல் இடம் வகிக்கின்ற போர்க் குற்றவாளி அமெரிக்காதான், உலக வெப்பமடைதலுக்கு உதவுகின்ற முதலாவது நாடு அமெரிக்கா என்றார் ஜனாதிபதி.
கருத்துரையிடுக