
கொழும்பு, நாவல பகுதியில் நீதியற்ற முறையில் சமய நிகழ்வு இடம்பெற்றதாக கூறி பௌத்த பிக்குகள், வீடு ஒன்றுக்கு புகுந்து அச்சுறுத்திய சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
சிங்கள ராவய என்ற அமைப்பை சேர்ந்த இந்த பௌத்த பிக்குகளே இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளனர். இதன்போது சிலர் குறித்த வீட்டின் பெண் மீது அவரது பிள்ளையின் முன்னிலையில் தாக்குதலையும் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த வீட்டுக்கு செல்லும்போது பௌத்த பிக்குகளால் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் வீடியோ பத்திரிகையாளரும் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
இதன்போது குறித்த வீட்டில் இருந்து புத்தபெருமானின் சிலை அகற்றப்பட்டதும் பைபிளையும் ஒரு பிக்கு வீசியெறிந்ததாக தெரிவிக்;கப்பட்டுள்ளது.
சிங்கள ராவய என்ற பௌத்த அமைப்பு ஏற்கனவே மஹரகம பகுதியில் நோ லிமிட் என்ற முஸ்லிம் வர்த்தக நிலையத்துக்குள்ளும் புகுந்த குழப்பம் விளைவிக்க முயற்சித்தை குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக