மட்டக்களப்பு காத்தான்குடியில் 15 கிலோ எடையுள்ள பாரிய குண்டு மீட்பு
Penulis : ۞உழவன்۞ on வெள்ளி, 7 ஜூன், 2013 | 5:25 AM
மட்டக்களப்பு - காத்தான்குடி நகரசபை பிரிவிலுள்ள முஸ்லிம் முதியோர் இல்ல வீதியிலிருந்து இன்று காலை வெடிக்காத நிலையில் 15 கிலோ எடையுள்ள குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ள வாய்க்காலைத் துப்பரவு செய்யும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டிருந்த போதே குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் வெடிக்காத நிலையில் இருந்த இக்குண்டு மீட்கப்பட்டுள்ளது. மிகவும் பழுதடைந்த நிலையில் இக்குண்டு உள்ளதாக தெரிவிக்கும் காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
லேபிள்கள்:
ஈழம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
home



Home
கருத்துரையிடுக