
விடுதலைப் புலிகளால் கொள்வனவு செய்யப்பட்ட 10 சிலின் ரக விமானங்கள், பாகங்களாகப் பிரிக்கப்பட்டு சிறிலங்காவுக்கு எடுத்துவரப்பட்டது என ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் புலிகள் எரித்திரியாவில் இருந்து இந்த விமானங்களை பாகம் பாகமாகப் பிரித்து அவற்றை கடல்வழியாக இலங்கையின் வடகிழக்கு கரையோரம் கொண்டுசெல்ல முயன்றதாகவும், இருப்பினும் இவ் விமானங்களை தரையிறக்கம் செய்ய முடியாமல் போனதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தவேளையும் இப்படியான ஒரு தரையிறக்க முயற்சிக்கு விடுதலைப் புலிகள் முயன்றதாகத் தெரிவித்த அவர், அக்கப்பலில் ஆயுதங்களும் வந்ததாகத் தெரிவித்துள்ளார். மலேசியாவிலும், இந்தோனேசியாவிலும் பயிற்றுவிக்கப்பட்ட சுமார் 12 விமானிகள் விடுதலைப் புலிகளிடம் தயார் நிலையில் இருந்ததாகத் தெரிவிக்கும் அவ் அதிகாரி, இறுதி நேரத்தில் பாரிய தாக்குதல் ஒன்றிற்கு விடுதலைப் புலிகள் தயாராக இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.விடுதலைப் புலிகள் இப் போர் சற்று நீடிக்கும் எனக் கணக்கிட்டிருந்ததாகவும், இருப்பினும் அது மிக விரைவாக முடிவுக்கு வந்தது எனவும் தெரிவிக்கும் இராணுவ அதிகாரி, கே.பி தேசியதலைவரின் மகன் சாள்ஸ் அன்ரனியுடன் செய்மதித் தொலைபெசியில் உரையாடியதைத் தாம் ஒட்டுக்கேட்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். அப்படியாயின் விடுதலைப் புலிகளின் தகவல் பரிமாற்றங்களையும் இந்திய அரசு ஒட்டுக்கேட்டு இலங்கை அரசிற்கு அத் தகவல்களை வழங்கியுள்ளமையும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இறுதிப் போர்க்காலங்களில் தானியங்கித் துப்பாக்கிகள் குறைவாக இருப்பதால் அதனை விநியோகிக்குமாறு சாள்ஸ் அன்ரனி செய்மதித் தொலைபேசியூடாக கே.பியிடம் கூறியதை தாம் ஒட்டுக்கேட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத அந்த இந்திய இராணுவ அதிகாரி கூறியிருக்கிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடையமாகும்.
கருத்துரையிடுக