மற்ற கைதிகளை விடுவித்தது போல வேலூர் சிறையிலிருக்கும் நளினி, ராபர்ட் பயஸ் ஆகியோரின் கோரிக்கையையும் பரிசீலித்து அவர்களை விடுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென்று மதிமுக பொது செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
வேலூர் மத்திய சிறையில், 18 ஆண்டுகளாக வாடிவதங்கும் சிறை வாசிகளான ராபர்ட் பயஸ், நளினி ஆகியோர், தங்களை விடுவிக்கக் கோரி, காலவரையற்ற உண்ணா நிலை அறப்போர் மேற்கொண்டு உள்ளனர்.
ஏழு ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருப்பவர்களையெல்லாம் தமிழக அரசு விடுவித்து வருகிறது. ஆனால், நளினி, பயஸ் இருவரையும் 18 ஆண்டுகளாக அடைத்து வைத்து இருப்பது அவர்களுடைய வாழ்க்கையை நரக வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது.
வேறு பல வழக்குகளில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை, கருணை அடிப்படையில் ரத்துச் செய்ய வேண்டும் என்று பலர் குரல் எழுப்புகையில், அதே மனிதாபிமான அணுகுமுறை, வேலூர் மத்திய சிறையில் மனத்துன்பத்துக்கு ஆளாகி உள்ள மரண தண்டனைக் கைதிகளுக்கு காட்டப்பட வேண்டும்.
விடுதலை எப்போது என்று தெரியாமல் சிறைக்கு உள்ளே கிடந்து துன்பப்படுவதை விட மரணமே மேல் என்று உள்ளம் உடைந்து, நளினி, ராபர்ட் பயஸ் இருவரும், காலவரையற்ற உண்ணாநிலை அறப்போராட்டத்தை மேற்கொண்டு உள்ளனர்.
மற்ற கைதிகளை விடுவித்தது போல, அதே அடிப்படையில் இவர்களின் கோரிக்கையையும் மனித நேயத்துடன் பரிசீலித்து விடுவிக்க அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
home



Home
கருத்துரையிடுக