
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அரசியல் விவகாரப் பிரதிச் செயலாளர் லின் பாஸ்கோவினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் உள்நாட்டு பணியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.குறித்த இரண்டு பணியாளர்களையும் விடுதலை செய்யுமாறு லின் பாஸ்கோ அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.எனினும், இந்த இரண்டு பணியாளர்களுக்கும் இராஜதந்திர சலுகை வழங்கப்பட முடியாது எனவும், இதனால் இவர்களை விடுதலை செய்ய முடியாது எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை படுகொலை செய்யும் முயற்சி தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த இரண்டு இலங்கைப் பணியாளர்களுக்கும் எதிராக அடுத்த வாரமளவில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.
home



Home
கருத்துரையிடுக