
இடம் பெயர்ந்தோர் முகாம்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தமிழர்களை சொந்த ஊர்களுக்கு இடம் பெயர வைக்கும் முயற்சிகள் மிக மிக மந்தமாக நடப்பதாக சமீபத்தில் அங்கு சென்று திரும்பிய ஐ.நா. அரசியல் பிரிவு தலைவர் லின் போஸ்கோ கூறியிருந்தார்.
இதையடுத்து "இடம் பெயர்ந்தோர்" முகாம்களின் நிலையை ஆய்வு செய்ய ஐ.நா. முடிவு செய்துள்ளது. இதற்காக ஐ.நா. மனித உரிமைப் பிரிவைச் சேர்ந்த இணைச் செயலாளர் வோல்டர் காலின் சிறீலங்கா விரைகிறார்.
இன்று கொழும்பு வரும் அவர் அதிகாரிகளை சந்தித்துப் பேசுவார் எனவும் பின்னர் "இடம் பெயர்ந்தோர்" முகாம்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்வார் எனவும் அறியப்படுகின்றது.
இதுகுறித்து சிறீலங்காவுக்கான ஐ.நா. செய்தித் தொடர்பாளர் கார்டன் வெய்ஸ் கூறுகையில், "இடம் பெயர்ந்தோர்" முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிலையை முழுமையாக ஆய்வு செய்து, நிலைமைகள் குறித்து அவர் ஐ.நா.வுக்கு அறிக்கை சமர்பிப்பார் என்றார். கடந்த ஏப்ரல் மாதமும் காலின் இடம் பெயர்ந்தோர் முகாம்களைப் பார்வையிட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக