சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் செல்ல அனுமதி கிடையாது. இந்த விதியை மீறி நடிகை ஜெயமாலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றார். கோவிலில் நடத்தப்பட்ட தேவபிரசன்னத்தின் போது இந்த விஷயம் வெளியானது.நடிகை ஜெயமாலாவும் தான் கோவில் சன்னதிக்குள் சென்று அய்யப்பன் விக்ரகத்தை தொண்டு வணங்கியதாக ஒப்புக் கொண்டார். மேலும் கோவிலுக்குள் செல்ல தனக்கு பரப்பனங்காடு உண்ணிகிருஷ்ண பணிக்கர் உதவியதாகவும் கூறினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
விதிமுறைகளை மீறி ஜெயமாலா கோவிலுக்குள் சென்றதற்காக அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர் கோவிலுக்குள் செல்ல உதவியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி பக்தர்கள் அமைப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் உண்ணி கிருஷ்ண பணிக்கர் முதல் குற்றவாளியாகவும், அவரது உதவியாளர் இரண்டாவது குற்றவாளியாகவும், நடிகை ஜெயமாலா 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கு குறித்த குற்றப் பத்திரிக்கையை போலீசார் திருவனந்தபுரத்தில் உள்ள ரான்னி முதல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதையடுத்து வரும் 15ஆம் தேதி நடிகை ஜெயமாலா கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என அவருக்கு கோர்ட் உத்தரவி பிறப்பித்துள்ளது
home



Home
கருத்துரையிடுக