காதலும், திகிலும் கலந்து புதுமையான கோணத்தில் ஒரு படம் தயாராகிறது. இந்த படத்துக்கு, மையம் கொண்டேன் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். மலையும், காடும் சார்ந்த பகுதிகள் மற்றும் கடலும், கடற்கரையும் சார்ந்த பகுதிகள் ஆகிய இரண்டு பகுதிகளையும் இணைக்கும் வகையில், திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
புதுமுகங்கள் திலீப்-ஷோபனா நாயுடு ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்கள். இவர்களுடன் கஞ்சா கருப்பு, வின்சென்ட் அசோகன், ரியாஸ்கான், காதல் தண்டபாணி, சுகுமாரி, சுமன் ஷெட்டி, பாண்டு, ஷர்மிலி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
தினா இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், கே.அர்ஜ×ன் ராஜா. ஜி.ஏ.ஜி. சினிமாஸ் சார்பில் படம் தயாராகிறது. படப்பிடிப்பு ராஜபாளையத்தில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது. பாடல் காட்சிகளை மொரீசியஸ் தீவில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
home



Home
கருத்துரையிடுக