
ஆந்திர மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவனை நாற்பது ரூபாய் பணத்துக்காக இளைஞன் ஒருவன் கொலை செய்துள்ளான்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் வேமுல கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தவன் கொண்ட குருவாரெட்டி (6). இவனது பெற்றோர் கூலி தொழிலாளிகள்.
இவன் பள்ளிக்கு போக மாட்டேன் என்று அடம்பிடித்ததால் அவனிடம் ரூ.40 கொடுத்து அனுப்பினர்.
இடைவேளையின்போது அவர் பள்ளிக்கு வெளியே உள்ள கடைக்கு சென்றான்.
அப்போது அவனது கையில் ரூ.40 இருப்பதை கோட்டிரெட்டி (18) என்பவர் பார்த்தார். உடனே அதை அவனிடம் இருந்து பறிக்க திட்டமிட்டார். சிறுவனை எவ்வளவோ ஏமாற்றியும் பணத்தை கைப் பற்ற முடியவில்லை.
இதையடுத்து சிறுவனை அங்குள்ள காட்டுப்பகுதிக்கு நைசாக அழைத்து சென்று 40 ரூபாயை பறித்தான். சிறுவன் பெற்றோரிடம் உண்மையை சொல்லிவிடுவானோ என்று பயந்த கோட்டிரெட்டி பாறாங்கல்லை அவன் தலையில் போட்டு கொன்று விட்டு தப்பி ஓடினான்.
இதுபற்றி வேமுலா போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டிரெட்டியை கைது செய்தனர். 40 ரூபாய்க் காக சிறுவனை கொன்ற சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
home



Home
கருத்துரையிடுக