
இலத்திரனியல் ஊடகமொன்றில் கடமையாற்றிய காலத்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பலருடனும் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த ஸ்ரீ ரங்கா, அதனை வைத்து வெளிநாட்டு புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டுவதில் அரசாங்கத்துக்கு உதவியளித்துள்ளார்.
அதற்கு மேலதிகமான நாமலின் நில் பலகாய குண்டர் அணியொன்றை யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கில் செயற்படுத்தி, அதன் மூலம் அரசாங்கத்துக்கெதிரான போராட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை அடக்க அவர் உதவி செய்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான நிலையில் அமைச்சுப் பொறுப்பொன்று வழங்கப்படும் பட்சத்தில் வடக்கில் புலிகள் அமைப்பு மீதான ஆதரவுப் போக்கையும் முற்றுமுழுதாகத் துடைத்தெறிய தன்னால் முடியும் என்று அவர் நாமல் ராஜபக்ஷவிடம் சுட்டிக்காட்டியதற்கிணங்க, அவரும் ஜனாதிபதியிடம் அதற்கான சிபாரிசை முன்வைத்துள்ளார்.
நாம் ஏற்கெனவே சுட்டிக்காட்டியபடி வட-கிழக்கு அபிவிருத்தி தொடர்பான அமைச்சுப் பொறுப்பொன்றே ஸ்ரீ ரங்காவுக்கு வழங்கப்படவுள்ளது. அவருக்கு அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படுவதில் எதிர்ப்புகள் கிளம்புமிடத்து அவருக்கான அமைச்சுப் பொறுப்பை ஜனாதிபதி கொஞ்ச காலத்துக்கு தம் வசம் வைத்துக் கொள்ளவுள்ளதுடன், அது வரைகாலமும் அவர் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டு, பின்பு அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார்.
கருத்துரையிடுக