
ஜே.வி.பி. கட்சி மற்றும் அதனுடன் இணைந்த கட்டமைப்புக்கள் அனைத்தும் லெபனானிய ஹிஸ்புல்லா போராளிகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சுமத்துகின்றார்.
அதன் காரணமாகவே ஜே.வி.பி. ஏற்பாடு செய்திருந்த அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் லெபனான் வாசியான மொஹம்மத் ஹாதிம் ஹ~தைத் தன் மனைவி சகிதம் பங்கு கொண்டதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

எனவே ஜே.வி.பி. மற்றும் ஹிஸ்புல்லா போராளி அமைப்புகளுக்கிடையிலான நெருக்கமான தொடர்புகள் குறித்து குற்றப்புலனாய்வுத்துறைப் பொலிசார் தற்போது பரந்து பட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தற்போதைய நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒருநாள் கூட ஆகாத நிலையில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு மற்றும் ஜே.வி.பி. என்பன ஹிஸ்புல்லாஹ் போராளிகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருப்பதற்கான ஆதாரங்கள் கிட்டியுள்ளதாக குற்றப் புலனாய்வுத்துறை அறிவித்துள்ளது.
அந்த வகையில் அரசுக்குத் தொடர்ச்சியான தலையிடியாக அமைந்திருக்கும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு மற்றும் ஜே.வி.பி. கட்சி என்பவற்றை அடக்கியொடுக்க ஹிஸ்புல்லாஹ் தொடர்பு என்றொரு ஆயுதம் அரசாங்கத்திடம் சிக்கியுள்ளது.
சர்வதேச சகோதரத்துவத்தின் பெயரால் தமிழ் மக்கள் மீதான அரசின் அடக்குமுறைகள் குறித்து குற்றப்புலனாய்வுத்துறையினரிடம் எதிர்க்கேள்வி கேட்ட ஒரே காரணத்துக்காக ஹாதிம் ஹ~தைத் ஹிஸ்புல்லா போராளியாக்கப்பட்டுள்ளார்.
இவ்வளவுக்கும் அவர் ஜனநாயக செயற்பாடுகள் மற்றும் இளைஞர் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் சார்ந்த சர்வதேச அமைப்புக்களில் அங்கம் வகிப்பதுடன், அவை தொடர்பில் சர்வதேச மட்டத்தில் வலுவான தொடர்புகளைக் கொண்டிருக்கும் ஒருவருமாவார்.
அரசாங்கம் அவருக்கே தீவிரவாதி என்று பட்டம் கட்டத் துணியுமானால் இலங்கையில் சமத்துவம் கோரும் தமிழ், முஸ்லிம்களின் நிலை பற்றி என்னவென்று ஆறுதல் பட முடியும் என்று சர்வதேச இளைஞர் பேரவையின் லெபனான் கிளை விடுத்துள்ள அறிக்கையில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக