
சவேந்திர சில்வா வன்னி இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய வந்த புலிகளின் சிரேஷ் உறுப்பினர்களை கொலை செய்த குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு, போர்க்குற்றத்தின் முதலாவது சந்தேக நபரான சவேந்திர சில்வாவை எப்போது விசாரணை செய்யும்? என இன்னர் சிற்றி பிரஸ் வினவியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதி நிரந்தர பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் நியூயோர்க் டைம்ஸ் கட்டுரை ஒன்றை பிரசுரித்துள்ளது.
இந்த கட்டுரையின் படி ஐக்கிய நாடுகளின் இந்த முனைப்பை சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கண்டித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவேந்திர சில்வா வன்னி இறுதி யுத்ததின் போது வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் சிரேஷ் உறுப்பினர்களை கொலை செய்த குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ளார்.
அத்துடன் பல்லாயிரம் பொது மக்களின் கொலைகள் தொடர்பான மனித உரிமை மீறல்களின் முதலாவது சந்தேக நபராகவும் அவர் கருதப்படுகிறார்.
இந்தநிலையில் வேறு ஒருவரை ஏன் இந்த ஐக்கிய நாடுகள் சபைக்கு நியமிக்கக் கூடாதென நியூயோர்க் டைம்ஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இதனையடுத்து இந்த விடயம் குறித்து நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் செய்தியாளர் மாநாட்டின் போது, பான் கீ மூனின் பதில் ஊடக பேச்சாளரிடம் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இலங்கையின் போர் குற்றம் தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நியமித்துள்ள நிபுணர் குழு, போர்க்குற்றத்தின் முதலாவது சந்தேக நபரான சவேந்திர சில்வாவை எப்போது? விசாரணை செய்யும் என இன்னர் சிற்றி பிரஸ் வினவியுள்ளது.
இதற்குப் பதிலளித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பதில் ஊடக பேச்சாளர், சவேந்திர சில்வா இலங்கை அரசாங்கத்தின் பணியாள் ஆவார். எனவே இந்த கேள்வி இலங்கை அரசாங்கத்திடம் கேட்கப்பட வேண்டிய ஒன்று என குறிப்பிட்டார்.
அத்துடன் பான் கீ மூனின் நிபுணர் குழு தொடர்பான தகவல்களை நாளுக்கு நாள் தெரிவித்து கொண்டிருக்க முடியாது என குறிப்பிட்ட அவர், நிபுணர் குழு, பான் கீ மூனிடம் தமது அறிக்கையை சமர்பிக்கும் போது அதிலுள்ள விடயங்களை அறிந்து கொள்ள கூடியதாக இருக்கும் என குறிப்பிட்டார்.
அதேவேளை, நிபுணர் குழு எப்போது தமது இறுதி அறிக்கையை வெளியிடும் என பதில் ஊடக பேச்சாளர் பர்ஹான் ஹக்கிடம் இன்னர் சிற்றி பிரஸ் வினவியது.
இதற்கு பதிலளித்த அவர், குறித்த நிபுணர் குழு உரிய தகவல்கள் கிடைத்த பின்னர் வெளியிடும் என தெரிவித்தார்.
கருத்துரையிடுக