
இது தொடர்பாக ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா கூறுகையில்,
அரசாங்கம் தனது அமைச்சர்களையும் பிரதியமைச்சர்களையும் அறிவித்துள்ளது. இதனடிப்படையில் கடந்த காலங்களில் மக்களின் வெறுப்புக்கு ஆளாகி பலருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி அரசாங்கம் தனது நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளது.
எனவே இந்த அரசாங்கம் நாட்டையோ மக்களையோ மேம்படுத்த எவ்விதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இவ்வாறான தொரு சூழ்நிலையில் மக்கள் இந்த அரசாங்கத்திடம் பிரச்சினைகளுக்குத் தீர்வை எதிர்பார்த்து காத்திருப்பதில் எவ்விதமான பலனும் கிடைக்கப்போவதில்லை.
வரவு செலவுத்திட்டத்திலும் மக்கள் நிவாரணங்களையும் சம்பள உயர்வுகளையும் எதிர்பார்த்திருந்தனர். அதிலும், வெறும் கண்துடைப்பே ஏற்பட்டுள்ளது.
யுத்தத்தை காரணம் காட்டி கடந்த காலங்களில் தற்போதைய அரசாங்கம் பொதுமக்களை வயிற்றைக் கட்டிக்கொண்டு வாழும் படி கூறியிருந்தது.
ஆனால் தற்போது தனது புதிய அமைச்சர்களை சுகபோகமாக வாழ வைக்கவும் தனது குடும்பத்தை வளர்த்துக் கொள்ளவும் பொதுமக்களை அனைத்தையும் பொறுத்துக்கொண்டு இருக்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
பொதுமக்கள் தற்போதைய அரசாங்கம் தொடர்பாக ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் நிதி இல்லை என்று கூறி மக்களின் நிதிகளை அரசாங்கம் மோசடி செய்கின்றது.
புதிய அமைச்சுப் பொறுப்புக்களை பெற்றுக்கொண்ட பல அமைச்சர்கள் இம்முறையும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பத்து சிரேஷ்ட அமைச்சர்களை தெரிவு செய்து அவ் அமைச்சர்களைத் அரசாங்கம் ஏமாற்றியுள்ளது.
அமைச்சர்களின் எண்ணிக்கையைத் குறைப்பதாக கூறிய அரசாங்கம் தனது உறுதிமொழிகளை மறந்து நாட்டு மக்களை மீண்டும் ஏமாற்றியுள்ளது. எனவே இந்த அரசாங்கத்தினால் பொது மக்கள் மென்மேலும் சுமைகளை சுமக்கவே நேரிடும் என்றார்.
கருத்துரையிடுக