பரசிட்டமோல் மாத்திரை கொடுக்கும் போது தொண்டையில் மாத்திரை சிக்கியதால் மூன்று வயதுக் குழந்தையொன்று மரணித்துள்ள சம்பவம் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். யாழ். மூளாய் பகுதியில் பிரஸ்தாப சம்பவம் நடைபெற்றுள்ளது.
சுகவீனமுற்றிருந்த குழந்தைக்கு அதன் தாயார் பரசிட்டமோல் மாத்திரையை விழுங்கக் கொடுத்தபோது, அது குழந்தையின் தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக குழந்தை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் இடைவழயில் மரணத்தைத் தழுவியுள்ளது.
குழந்தையின் சடலம் மேலதிக விசாரணைகளுக்காக வட்டுக்கோட்டை பொலிசாரால் யாழ். போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
home



Home
கருத்துரையிடுக