News Update :
Home » » போர் மமதையில் இருந்து அரசாங்கம் இன்னமும் விடுபடவில்லை

போர் மமதையில் இருந்து அரசாங்கம் இன்னமும் விடுபடவில்லை

Penulis : Antony on வெள்ளி, 26 நவம்பர், 2010 | முற்பகல் 9:39

கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ச்சியாக காலத்திற்குக் காலம் நடத்தப்பட்ட தமிழினத்திற்கு எதிரான தாக்குதல்கள் மூலம் உயிரிழப்புகள்,சொத்தழிப்புகள், சொத்துகளைச் சூறையாடல், தமிழ் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பு, ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின் வரைமுறையற்ற கைதுகள்,கொலைகள்,உயர்கல்வி வாய்ப்பு பறிப்பு, உத்தியோகப் பறிப்பு என உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் அடிப்படைத் தேவைகள் மறுப்பு ரீதியாகவும் பல முனைகளில் தமிழ் இன ஒழிப்பை நிகழ்த்தி வந்த சிங்கள ஆட்சியாளர்கள் இன்று தமிழ் இனவொழிப்பை வேகப்படுத்தும் வேலைத்திட்டத்தினை "பயங்கரவாதத்துக்கெதிரான யுத்தம்' என்ற போர்வையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாகச் செயற்படுத்தி வருகின்றனர்.
இன்று வடக்கு,கிழக்கு மாகாணங்களில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைமையை உதாசீனம் செய்து நிர்வாக அதிகாரிகளின் சுதந்திரமானதும் சட்டபூர்வமானதுமான செயற்பாடுகளைத்தடுத்து இனவெறியூட்டப்பட்ட இராணுவத்தின் துணையுடன் தமிழ் இனவொழிப்பு நடவடிக்கையை அதிவேகப்படுத்தும் செயல்திட்டத்தினை அபிவிருத்தி என்ற பெயரால் இவ்வரசு செயற்படுத்தி வருகிறது. இங்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் வரவுசெலவுத் திட்டமானது தமிழ் இனவொழிப்பு செயல்திட்டத்தை நாசூக்காகவும் தாக்கமாகவும் நடைமுறைப்படுத்தற்கேற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ளமை துலாம்பரமாக வெளிப்படுத்துகிறது.

இனப்படுகொலை தொடர்பாக மனோரீதியானதும் மற்றும் உடல் ரீதியானதும் தொடர்பாக இலங்கையில் உள்ள நிலைமை என்ன?

மனோரீதியாக இலங்கையில் தமிழ் இனத்தை இல்லாதொழிக்கும் வேலை இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே ஆரம்பித்து விட்டது. சிங்கள பௌத்தத்தின் மறுமலர்ச்சித் தலைவர் என்று சொல்லக்கூடிய அநõகரிக தர்மபாலவின் குடிணடச்டூஞுண்ஞு ச்ணூஞு tடஞு ண்ணிண ணிஞூ tடஞு ண்ணிடிடூ. கூடஞு கூச்ட்டிடூண்,ட்ணிணிணூண் ச்ணஞீ Mச்டூச்தூச்டூஞுஞுண் ச்ணூஞு tடஞு ச்டூடிஞுணண் என்ற பிரசாரத்தைத் தொடர்ந்து சிங்களத்தை மட்டும் அரச கரும மொழியாகக் கொண்டு வந்து தமிழ்மொழியை அழித்தல், மலைநாட்டில் தமிழ் மக்களின் வாக்குரிமையை பிடுங்கி அவர்களின் பிரதிநிதித்துவத்தை அழித்தல்,தமிழ் மக்கள் பாரம்பரியமாகவும் பெரும்பான்மையாகவும் வாழ்ந்த இடங்களில் சிங்கள மக்களைக் குடியேற்றி தமிழரை அவர்களது பூர்வீக இடங்களில் சிறுபான்மையினராக்கி அவர்களின் தனித்துவத்தை அழித்தல், தமிழ் மக்களது நூலகங்களை எரித்து அவர்களது வரலாறு மற்றும் கலாசார பாரம்பரியங்களை அழித்தல், இவை எல்லாமே தமிழினத்தின் தனித்துவத்தை அழிப்பதன் மூலம் தமிழினத்தை இல்லாதொழிக்கத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசுகள் எடுத்து வந்த முயற்சிகளாகும்.

உடல் ரீதியானது என்பதில் ஓடிடூடூடிணஞ் Mஞுட்ஞஞுணூண் ணிஞூ tடஞு எணூணிதணீ என்பது இன அழிப்பின் ஓர் முக்கிய வடிவமாகும். இன அழிப்பிற்கெதிராக போராடிய எத்தனை இலட்சம் தமிழ் மக்கள் கடந்த 30 ஆண்டுகளில் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். சுதந்திரத்தின் பின் எத்தனை இனக்கலவரங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றில் எத்தனை ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள் 2005 இல் இன்றைய ஆட்சியாளர் பதவிக்கு வரு முன்னர் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர் என்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற முகமூடிக்குள் ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் பக்கச்சார்பற்ற கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இராணுவத்தால் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட அல்லது காணாமல்போன இளைஞர்கள்,யுவதிகள் பல்லாயிரம் பேர் மேலும் ஏறத்தாழ பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இராணுவ அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு விரட்டப்பட்டுள்ளனர். நடைபெற்ற இப்பாரிய அளவிலான கொலைகள் தொடர்பாக அரசாங்கத்திடம் எந்தவிதமான புள்ளிவிபரங்களும் தகவல்களும் இல்லை என்பதுடன் ஒரு சம்பவத்திலாவது குற்றவாளி தண்டிக்கப்பட்டானா? என்றால் இல்லை. இவை எல்லாம் ஆட்சியாளரின் இனவொழிப்பு நோக்கத்தையே அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன. ஓர் இனத்தின் உறுப்பினர்களைப் பகுதியாகவோ, முழுமையாகவோ கொன்றொழிப்பது என்பது வெளிப்படையான இனவொழிப்பு நடவடிக்கையாகும்.

அதாவது ஓர் இனத்தின் ஒரு பகுதி மக்களையோ அல்லது அனைவரையுமோ உடல் ரீதியாகவோ அல்லது உளரீதியாகவோ கடுமையான துன்பத்திற்குள்ளாக்குவதென்பதும் இனவொழிப்பின் இன்னோர் வடிவமாகும். அரச பயங்கரவாதம் காரணமாகக் கொன்றொழிக்கப்பட்ட மக்கள் போக எஞ்சியிருப்போரில் அங்கவீனர் ஆக்கப்பட்டோர்,குண்டுத்தாக்குதல்களால் உடல்களில் செல் துண்டுகளை தாங்கி நீண்டகால நோயாளிகளாக்கப்பட்டோர் பல்லாயிரம் பேர்.

தாய்,தந்தையை இழந்து மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவர்கள்,தமது பிள்ளைகளை இழந்து எதிர்காலம் பற்றிய கனவுகளையும் தமது பாதுகாப்பையும் தொலைத்து நடைபிணமாக வாழும் பெற்றோர்கள் பல பத்தாயிரத்தைத் தாண்டும். வடக்கு,கிழக்கில் ஏறத்தாழ ஒரு இலட்சத்தை அண்மித்த தமிழ்ப் பெண்கள் கணவன்மாரை இழந்து வாழ்க்கையே வெறுமையாகப் போயுள்ளதுடன், தமது குழந்தைகளை வளர்க்க வழியற்ற பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இவ்விதவைகளில் ஏறத்தாழ பாதிப்பேர் இளம் வயதினர் ஆவர். ஆக தமிழ் மக்களின் ஒரு தலைமுறை இளைஞர் சமுதாயத்தின் பெரும்பகுதி அழித்தொழிக்கப்பட்டதன் மூலம் அடுத்த தலைமுறை உருவாக்கத்திற்கான மூலங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டிருக்கின்றது.

ஓர் இனத்தை முழுமையாகவோ அரைகுறையாகவோ அழிப்பதற்கான திட்டமிட்ட புறச்சூழ் நிலைகளை உருவாக்குவதல் என்பது இனவொழிப்பின் இன்னோர் வடிவமாகும். வடக்கு,கிழக்கை இராணுவமயமாக்கி தமிழ் மக்களின் அரசியல் தலைமையும் முடக்கி திட்டமிட்ட இராணுவ ஆட்சியினை நிலை நிறுத்துவதன் ஊடாக மக்களின் அடிப்படை உரிமைகள் ஜனநாயக உரிமைகளை மறுத்து அடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கும் சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. வடக்கு,கிழக்கில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இக் கிராமங்களிலுள்ள மக்களின் குடிமனைகள் வரை பரவியிருக்கின்றனர். மக்களின் அன்றாட வாழ்க்கை,சுதந்திரமான போக்குவரத்து ஆகியவற்றை இது பாதிப்பது மட்டுமன்றி மக்களின் பாதுகாப்பிற்கு குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாகவுள்ளனர்.

வடக்கு,கிழக்கில் போரின்போது மக்களின் வீடுகள், பொதுச் சொத்துகளுக்குச் சேதங்கள் ஏற்பட்டதுடன், ஒரு பகுதி முற்றாக அழிக்கப்பட்டது. சேதமான பெரும்பகுதி வீடுகளும் பொதுக்கட்டிடங்களும் திருத்திப் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருந்தன. ஆனால், போர் முடிந்த பின்னர்தான் பெருமளவு வீடுகளும் பொதுக் கட்டிடங்களும் இராணுவத்தினரால் புல்டோசர் மூலம் தரைமட்டமாக்கப்பட்டு ஊர்கள் இருந்த அடையாளமே தெரியாமல் நிலத்துள் மூடப்பட்டன. கிழக்கில் சம்பூரும் வடக்கில் இயக்கச்சி,முல்லைத்தீவில் பல கிராமங்களும் இவ்வாறு காணாமல் போயுள்ளன. இங்கு வாழ்ந்த ஏறத்தாழ இரண்டாயிரம் குடும்பங்களைச் சேர்ந்த எட்டாயிரம் பேரில் இன்று வரை ஒருவர் கூடத் தமது வீடுகளில் குடியேற்றப்படவில்லை. ஆறு பாடசாலைகள்,எட்டுக் கோவில்கள்,இரண்டாயிரம் வரையான வீடுகள்,ஒரு வைத்தியசாலை ஆகியவற்றைக் கொண்ட பல நூற்றாண்டு கால பழம்பெரும் குடியிருப்பு முற்று முழுதாக மண்ணுக்குள் புதைக்கப்பட்டு பத்தாயிரம் ஏக்கர் கொண்ட இவ்வூர் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளமே இல்லாமல் வெட்டை வெளியாக்கப்பட்டுள்ளது. இதைவிட இவ்வூருக்கான விலாசத்தையே அழிக்கும் வகையில் தபால் அலுவலகம் மீளப்பெறப்பட்டுள்ளது.

வன்னியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் சொத்துகள்,கால்நடைகள்,வாகனங்கள் ஆகியன கொள்ளையிடப்பட்டது மட்டுமன்றி,வீட்டுக்கதவுகள்,ஜன்னல்கள்,கூரைகள் உட்பட அனைத்தும் இன்றும் மக்களின் கண்முன்னாலே திருடப்படுகின்றன. மக்களுக்கும் சிவில் அதிகாரிகளுக்கும் சம்பந்தப்பட்ட அன்றாட அலுவல்கள், இராணுவத்தின் தலையீடுகளாலும் இராணுவத்தினரிடம் அனுமதி பெற வேண்டிய நிலைகளாலும் அகதிகளான தமிழ் மக்களுக்கு கடும் அசௌகரியங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. வடக்கு,கிழக்கில் இராணுவ ஆட்சியானது அரசாங்கத்தின் இனவொழிப்பு வேலைத்திட்டத்தைத் துரிதமாக நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. தம் இனவாதக் கொள்கையைச் செயற்படுத்துவதற்கும் மக்களைப் பணியவைப்பதற்கும் புலிகளுடன் தொடர்பு அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு என்கின்ற சுலபமான ஒரு காரணத்தை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகின்றனர். இத்தகைய எதேச்சதிகார சூழ்நிலையானது வடக்கு,கிழக்கு மக்களை ஒன்றில் விரட்டியடிப்பது அல்லது அடிமைப்படுத்துவது என்கின்ற இனவழிப்பு நோக்கங்களைத் தவிர வேறு ஏதும் இருக்க முடியாது.

இவற்றுக்குப் பலம் சேர்க்கும் வகையில் இன்னொருபுறம் வேகமான கலாசார அழிப்பு செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

வடக்கு,கிழக்கில் இராணுவ விமானப்படைக் குண்டு வீச்சினால் பல நூறு கோவில்களும் தேவாலயங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் அவற்றைப் புனரமைத்து மக்களின் வழிபாட்டுக்கு அனுமதிப்பதற்கு மாறாக கோவில்களின் சுற்றுப்புறங்களில் இராணுவ முகாம்களை அமைப்பதும் மீதமிருக்கும் கோவில்களை அழிப்பதும் மக்கள் அவற்றைப் புனரமைப்பதற்கோ சுதந்திரமாகச் சென்று வழிபடுவதற்கோ தடைவிதிப்பது மட்டுமன்றி,விலையுயர்ந்த கோவில் விக்கிரகங்களைத் திருடுவதுமே நடைபெறுகின்றது. பௌத்தம் அரச மதம் என்ற அரசியல் யாப்பு உரிமையை கேள்விக்கிடமற்ற அதிகாரமாகப் பயன்படுத்தி பௌத்தர் இல்லாத இடங்களில் பௌத்த விகாரைகளை நிர்மாணித்தல்,பழைமையும் புனிதமும் மிக்க இந்துக் கோவில்களுக்கு அருகில் பௌத்த விகாரைகளையும் பெரும் புத்தர் சிலைகளையும் நிர்மாணித்தல். இதன் மூலம் பௌத்தர் அல்லாத மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தலும் அவர்களின் நிலங்களை கபளீகரம் செய்தலும் தமிழக மக்களின் கலாசார தனித்துவங்களை அழிக்கும் செயற்பாடுகளே!

யாழ்ப்பாணத்தின் மாதகலில் ஓர் புதிய பௌத்த கோவில் கட்டப்பட்டுள்ளது. இப்பொழுது ஏ9 பாதையின் மாங்குளத்தில் புதிய பௌத்த கோவில் கட்டப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவு கச்சேரிக்கு முன்பாக பௌத்த கோவில் கட்டுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. வவுனியா வைத்தியசாலையில் உள்ள நீர்த்தாங்கி உடைக்கப்பட்டு ஆளுநரின் உத்தரவின் பேரில் அங்கும் ஓர் பௌத்த கோவில் அமைக்கப்படுகின்றது. பாடல் பெற்ற பழம்பெருமை வாய்ந்த இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த இலங்கையின் ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரத்தின் முகப்பில் புதிய பௌத்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பல வருடங்களுக்கு முன்பாகப் பாடல் பெற்ற திருத்தலமான திருகோணமலையின் கோணேஸ்வர ஆலயத்தின் முன்பாக பாரிய புத்தர் சிலை அமைக்கப்பட்டது. இன்று தமிழ் மக்கள் தமது இறுதிக் கிரியைகளைச் செய்கின்ற மிகவும் தொன்மை வாய்ந்த இராவணனால் தனது தாய்க்கு இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டதாக சொல்லப்படும் கன்னியா வெந்நீர் ஊற்றும் பௌத்த துறவிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனைவிட வன்னியின் பல பகுதிகளிலும் பௌத்த கோவில்கள் உருவாகி வருகின்றன.

நாங்கள் ஒன்றும் பௌத்த கோவில்களுக்கோ பௌத்தர்களுக்கோ எதிரானவர்கள் அல்ல. ஆனால், அது பௌத்த மக்கள் இருக்கும் இடங்களில் அவை உருவாக்கப்பட வேண்டும். வன்னியில் இராணுவத்தினருக்கோ, பொலிஸாருக்கோ பௌத்த கோவில்கள் தேவைப்பட்டால் அது அவர்களின் முகாம்களில் அமைக்கப்பட வேண்டும். தமிழ் மக்களோ,இந்துக்களோ செறிந்து வாழும் இடங்களில் அமைக்கப்படுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. அது தமிழ் இனவொழிப்பின் இன்னொரு பரிமாணமாகவே பார்க்கப்படும்.

இவை மட்டுமன்றி, தமிழ்ப் பிரதேசங்களில் சாதாரண அரச அலுவலகத் திறப்பு விழாக்கள் உட்பட நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ் பாரம்பரிய இசைகளுக்கு பதிலாகக் கண்டிய நடனங்களையும் சிங்கள இசைகளையும் திணித்தல், தேசிய கீதத்தை சிங்களத்தில் பாடும்படி தமிழ் மாணவர்களை நிர்ப்பந்தித்தல்,பௌத்த விழாக்களுக்கு பௌத்தர் அல்லாத மக்களிடமும் வர்த்தகர்களிடமும் கட்டாயப்படுத்திப் பணம் சேர்த்தல், அவ்விழாக்களுக்கு மக்களை வரும்படி வற்புறுத்தல் ஆகியவற்றின் மூலம் தமிழ்க் கலாசாரத்தின் இருப்பிற்கு அபாய விளக்குக் காட்டப்படுகின்றது. இவை மட்டுமன்றி, தமிழ் மக்களின் வரலாற்றுச் சின்னங்களை அழித்தல் மற்றும் அவற்றைத் திரித்துக்காட்ட முற்படல் ஆகியவற்றிலும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தால் போல் இந்துக்களின் புனித நாளான நவம்பர் 21 ஆம் திகதி தீபத்திருநாளன்று வீடுகளில் தீபமேற்றிய மக்கள் பலர் கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் இராணுவத்தினால் அடித்து நொருக்கப்பட்டுள்ளனர். இவையனைத்தும் வெளிப்படையான கலாசார அழிப்பின் உச்சக்கட்டமாகும்.

இங்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் வரவுசெலவுத் திட்டமானது மேலே பட்டியலிடப்பட்டுள் பலமுனை தமிழின அழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான அப்பட்டமான இனவாத வரவு செலவுத் திட்டம் என்பதனை சாதாரண பாடசாலை மாணவனாலேயே புரிந்துகொள்ள முடியும்.

யுத்தம் முடிவடைந்தவுடன் எல்லோருக்கும் நிவாரணம் கிடைக்கும் எனப் பொதுமக்களும் சம்பள உயரும் என அரச ஊழியர்களும் முதலீட்டு வாய்ப்புகள் அதிகரிக்கும் என முதலீட்டாளர்களும் வணிகம் விருத்தியடையும் என வணிகர்களும் எதிர்பார்த்ததுடன், மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என மனிதாபிமானமுள்ள

வெளிநாடுகளும் எதிர்பார்த்தன. அழிக்கப்பட்ட தமது வீடுகள் மீளக் கட்டித்தரப்படும் என நான்கு இலட்சம் வரையிலான வடக்கு,கிழக்கு மக்கள் எதிர்பார்த்தனர். தமது சொத்தழிவிற்கான நிவாரணங்கள் கிடைக்கும் என எதிர்பார்த்தனர்.தமக்கு வாழ்வாதாரத்துக்கான உதவிகள் வழங்கப்படும் என எதிர்பார்த்தனர். இராணுவ செலவு குறைக்கப்பட்டு மீள்குடியிருப்பு, கல்வி,சுகாதார மீள்கட்டுமான செலவுகளுக்கு ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்படும் என எதிர்பார்த்தனர். ஆனால், இவற்றில் எதுவுமே வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை.

அரசாங்கம் இன்னும் யுத்த மமதையிலிருந்து விடுபடவில்லை. பாதுகாப்புக்கு 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2011 ஆம் ஆண்டுக்காக 13 பில்லியன் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்தத் தொகையானது பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகையை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமானதாகும். பாதுகாப்புக்கு அதிக நிதியொதுக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் கடந்த காலங்களில் பாதுகாப்பு உபகரணங்கள் கொள்வனவில் ஏற்பட்ட கடனை அடைப்பதற்காக என்று கூறப்படுகின்றது. இது முற்றிலும் தவறானதாகும்.

வெளிநாட்டுக் கடன்களை அடைக்கும் பணி நிதியமைச்சினுடையதாகும். ஒவ்வொரு அமைச்சு தொடர்பான கடனையும் திருப்பிச் செலுத்தும் முழுப்பொறுப்பும் நிதியமைச்சினுடையதாகும். இது பாதுகாப்பு அமைச்சுக்கும் பொருந்தும். பாதுகாப்புக்கு அதிக நிதியொதுக்கப்பட்டுள்ளமைக்கான அடுத்த காரணம் பாதுகாப்பு அமைச்சு அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுகின்றது என்பதாகும். அப்படியானால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் ஏனைய அமைச்சுக்களும் எதற்காக இருக்கின்றன? என்ற கேள்விக்கப்பால் பாதுகாப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட 215 பில்லியனானது முப்படைகளுக்கும் பொலிஸுக்கும் ஏனைய பாதுகாப்புத் தொடர்பான நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதே தவிர, அபிவிருத்திக்கு அல்ல என்பதையும் நான் இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

பாதுகாப்புக்கு கடந்த ஆண்டினை விட 13 பில்லியன் ரூபாக்கள் அதிகமாக ஒதுக்கிய அரசாங்கம் கல்விக்கும் உயர் கல்விக்கும் முறையே 2.7 மற்றும் ஒரு பில்லியன் ரூபாவையே அதிகமாக ஒதுக்கியுள்ளது. இதுதான் அரசாங்கம் இந்நாட்டின் கல்வியைப் பாதுகாக்கும் இலட்சணமா? அரச ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டால் நாட்டின் அபிவிருத்திக்காக அவர்கள் சம்பள உயர்வினைத் தியாகம் செய்ய வேண்டும் என உபதேசிக்கப்படுகின்றது. 30 வருடங்களாக சம்பள உயர்வினைத் தியாகம் செய்து இன்று ஆசியாவிலேயே குறைவான சம்பளம் பெறுபவர்கள் என்னும் நிலையை அடைந்துள்ளமை போதாதா? கல்வி, உயர்கல்விக்கு மட்டுமல்ல தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (3.7 பில்லியன்) போன்ற மிக முக்கிய அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் அளவும் போதுமானதல்ல.

நாடு தீவாக இருந்தும் கடல் உணவுப் பொருட்கள் கூட இறக்குமதி செய்யப்படுகின்றன. இருந்தும் கடற்றொழில் நீரக வளமூலங்கள் அமைச்சுக்கு 4.4 பில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளன. பால் மா இறக்குமதிக்காகப் பெருந்தொகைப் பணம் செலவிடப்படும் நிலையில், கால்நடை வளர்ப்பு மற்றும் கிராமிய சனசமூக அபிவிருத்தி அமைச்சுக்கு 2.2 பில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிப்பது தொடர்பில் அசிரத்தைக் காட்டப்பட்டுள்ளது என்பதையே காட்டுகின்றன. இவ்வாறான நிலையில் இறக்குமதிகளைக் குறைப்பது எவ்வாறு?
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger