மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திலகவதியார் இல்லத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருப்பதைக் அறிந்து, அதற்கு காரணமாக இருந்த 64 வயதுடைய நபர் ஒருவரை களுவாஞ்சிகுடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.ஓய்வு பெற்ற சுகாதாரவைத்தியர் பிரிவில் புத்தக கட்டுனராக இருந்த ஒருவரே குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும், குறித்த நபர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தும்பங்கேணி திக்கோடையைச் சேர்ந்த குறித்த சிறுமி செட்டிபாளையத்தில் கல்வி கற்று வந்துள்ளார். கடந்த 10ஆம் மாதம் இவர் குழப்படி அதிகம் என்ற காரணத்தினால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் அவர் தும்பங்கேணியில் பாடசாலைக்குச் சென்று வந்துள்ளார். அப்போது இவருடைய வயிறு பெரிதாக இருப்பது கண்டு வைத்தியரிடம் சோதனை நடத்திய போது இவர் கர்ப்பிணி என்பது தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்டந்து சிறுமியிடம் விசாரணை செய்த வேளை குறித்த சந்தேக நபர் தன்னுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக அவர் கூறியுள்ளார். சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
home



Home
கருத்துரையிடுக