
இவ்வாறு மீட்கப்பட்ட சிறுவன் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில், பொலிஸார் குறித்த சிறுவனை மன்னார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், நயினாதீவு பகுதியைச் சேர்ந்த இந்த சிறுவன், நேற்று முன்தினம் கட்டுமரம் ஒன்றில் கடற்பரப்பில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் பிணைத்துக் கட்டியிருந்த கயிறு அவிழ்ந்த நிலையில் கட்டுமரத்துடன் கடலில் இழுத்துச்செல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே, இந்த சிறுவன் நேற்றைய தினம் தலைமன்னார் கடற்பரப்பில் மிதந்து தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
கருத்துரையிடுக