
கடந்த இரண்டு வாரங்களாக இடைவிடாத தொடர் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தாழ்நிலங்கில் உள்ள மக்கள் மிகப்பாதிக்கப்பட்டள்ளனர்.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நகரை அண்டியுள்ள பொம்மை வெளிப்பகுதியில் உள்ள 100 வரையான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுக்குளம் உட்பட பல குளங்கள் வான் பாய ஆரம்பித்துள்ள நிலையில் மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் இருப்பிடம் கூட இல்லாத நிலையில் தண்ணீருக்குள் வாழ்கின்றனர். மேலும் பிரமந்தனாறு, சாந்தபுரம், பொன்னகர், பன்னங்கண்டி, போன்ற கிராமங்களில் மக்கள் தமது வாழிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.
மேலும் முன்று மாவட்டங்களிலும் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பித்துப் போயுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்களின் பாதிப்பு குறித்து முழுமையான தகவல்களை அறியமுடியாத நிலை காணப்படுவதாக அந்தந்த மாவட்டங்களின் செயலகங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக