
இன்று காலை காற்றுடன் கூடிய கனமழை பெய்ததையடுத்து இதன்காரணமாக பண்ணை வீதியினை மேவி கடல் நீர் பல இடங்களில் பாய்ந்தது இதன் காரணமாக பண்ணை வீதி; பல இடங்களில் உடைந்து போனதுடன் கனரக வாகனங்கள் போக்குவரத்து செய்ய முடியாத படி சேதமடைந்தது.
இதன்காரணமாக இலங்கை போக்குவரத்து சபையினதும் தனியார் போக்குவரத்துச் சேவையினதும் தீவகத்திற்கான சகல போக்குவரத்து சேவைகளும் இன்று காலையுடன் அவரசரமாக நிறுத்தப்பட்டது. மேலும் தீவகத்திற்குள்ளிருந்த தென்னிலங்கை பிரயாணிகள் பாதைக்கு மண்முடைகள் போடப்பட்டு அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வாகனங்ள் தீவகத்திற்குள் நுழையாத வண்ணம் போக்குவரத்துப் பொலிஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். மேலும் மழையால் தீவகத்திற்கான பொருட்கள் கொண்டு செல்வதும் தடைப்பட்டுள்து.
கருத்துரையிடுக